பாகிஸ்தான் நாக்அவுட்.. பிரேசிலால் இந்தியாவுக்கு ஜாக்பாட்.. ஆகாஷ் வான்வெளி சிஸ்டமுக்கு எகிறிய டிமாண்ட்!
டெல்லி: பாகிஸ்தான் உடனான போரில் நம் நாடு வெற்றி பெற்றது. இந்த போரின்போது பாகிஸ்தான் நம்மை பல்வேறு வகைகளில் தாக்க முயன்றும் அது வெற்றி பெறவில்லை. பாகிஸ்தானின் போர் விமானம், ஏவுகணை, ட்ரோன்களை எஸ் 400 மற்றும் ஆகாஷ் ஏவுகணை தடுப்பு சிஸ்டம்கள் வானிலேயே தாக்கி அழித்தன. இதில் நம் உள்நாட்டு தயாரிப்பான ஆகாஷ் ஏவுகணை தடுப்பு சிஸ்டமிற்கு தற்போது மவுசு அதிகரித்துள்ளது. அதனை நம் நாட்டிடம் இருந்து பிரேசில் வாங்க ஆர்வம் காட்டி உள்ளது. இந்த ஆகாஷ் ஏவுகணை தடுப்பு சிஸ்டம் என்பது என்ன? அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தி 26 பேரை கொன்றனர். இந்த தாக்குதலுக்கு நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள், விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன.

இதனால் இருநாடுகள் இடையே போர் நடந்தது. பாகிஸ்தானும் நம்மை தாக்க முயன்றது. பாகிஸ்தான் நம்மை தாக்க அனுப்பிய போர் விமானம், ட்ரோன்கள், ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தப்பட்டன. பாகிஸ்தானால் நம்மை தொட கூட முடியவில்லை.
அதேவேளையில் மறுபுறம் நம் நாட்டின் அதிரடி தாக்குதலால் பாகிஸ்தான் நிலைக்குலைந்து போனது. இதனால் வேற வழியின்றி பாகிஸ்தான் நம்மிடம் சரணடைந்த நிலையில் மோதல் முடிவுக்கு வந்தது. பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்ததில் எஸ் 400 மற்றும் ஆகாஷ் வான்வெளி தடுப்பு சிஸ்டம்கள் மிகவும் முக்கியமானவை.
இதில் எஸ் 400 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் ரஷ்யாவின் தயாரிப்பாகும். ஆகாஷ் ஏவுகணை தடுப்பு சிஸ்டம் நம் நாட்டின் தயாரிப்பாகும். இந்த 2 வான்வெளி சிஸ்டம்கள் தான் பாகிஸ்தானின் ஏவுகணை, ட்ரோன்களை கண்டுபிடித்து வானிலேயே சுட்டு வீழ்த்தியது.
அந்த வகையில் ஆகாஷ் ஏவுகணை தடுப்பு சிஸ்டமுக்கு தற்போது மவுசு அதிகரித்துள்ளது. அதனை பிரேசில் வாங்க முடிவு செய்துள்ளது. இந்த ஆகாஷ் ஏவுகணை தடுப்பு சிஸ்டம் என்பது
ஏஐ தொழில்நுட்பத்துடன் செயல்படும். எதிரிகளின் ட்ரோன்கள், ஏவுகணைகள், போர் விமானங்களை துல்லியமாக சுட்டு வீழ்த்தும் சக்தி கொண்டது.
இந்த ஆகாஷ் ஏவுகணை எதிரியின் ஏவுகணை, ட்ரோனை 180 கிலோ மீட்டர் தொலைவில் வரும்போதே கண்டுபிடித்து விடும். அதன்பிறகு இதில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள், தரையில் இருந்து பறந்து சென்று வானில் வரும் எதிரிகளின் ஏவுகணை, போர் விமானங்கள், ட்ரோன்களின் வழிப்பாதையை கண்டறிந்து 25 கிலோமீட்டர் தொலைவில் வரும்போது தாக்கி அழிக்கும். எதிரிகளின் ஏவுகணைளை கண்டறிய இதில் சக்தி வாய்ந்த ராஜேந்திரா என்னும் ரேடார் வசதி உள்ளது.
ராணுவத்துக்கும் விமானப்படைக்கும் தனித்தனி ஸ்டைலில் ஆகாஷ் ஏவுகணை தடுப்பு சிஸ்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. விமானப்படையிடம் இருக்கும் ஆகாஷ் ஏவுகணை சிஸ்டத்தின் ரேடார் 60 கிலோ மீட்டர் சுற்றளவை கண்காணிக்கும். ஒரே நேரத்தில் 64 இலக்குகளை குறி வைக்க முடியும். அதே நேரம் ராணுவத்திடம் இருக்கும் ஆகாஷ் சிஸ்டத்தின் ரேடார், 100 கிலோ மீட்டர் சுற்றளவில் 40 இலக்குகளை குறி வைக்கும் சக்தி கொண்டது. ஆகாஷ் சிஸ்டத்தில் இருந்து பறக்கும் ஏவுகணை சூப்பர் சோனிக் வேகம் கொண்டது. மணிக்கு 4321 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து தாக்க கூடியது.
இதன் தாக்கும் திறன் 100 சதவீதம் என்கின்றனர். எதிரி அனுப்பும் எந்த ஆயுதமும் தப்ப முடியாது. எனவே தான் இதை பிரேசில் நாடு விரும்பி கேட்டுள்ளார். மோடி தனது 5 நாடு பயணத்தின் முக்கிய அம்சமாக, நாளை முதல் 8 ம் தேதி வரை பிரேசிலில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். அந்த மாநாட்டில் இதுதொடர்பாக விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. அப்போது பிரேசிலுக்கு ஆயுதங்கள் விற்பது தொடர்பாக முக்கிய திட்டம் உறுதி செய்யப்படும் என்று நம் வெளியுறவு அமைச்சகம் கூறி உள்ளது.
மேலும் பிரேசில் நம் நாட்டிடம் இருந்து ஆகாஷ் ஏவுகணை தடுப்பு சிஸ்டம் மட்டுமின்றி கூடவே கடலோர கண்காணிப்பு ரேடார்கள், ரோந்து கப்பல்கள், ஸ்கார்பீன் ரக நீர் மூழ்கி கப்பல்கள், கருடா பீரங்கி துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றையும் இந்தியாவிடம் இருந்து வாங்க பிரேசில் முடிவு செய்திருக்கிறது. இதன்மூலம் பாகிஸ்தான் உடனான நம் நாட்டின் போரில் நமது உள்நாட்டு தயாரிப்பு தளவாடங்களை வாங்க பிரேசில் ஆர்வம் காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவின் நிலைமை மோசமாக போகுது! டிரம்ப் பார்த்த வேலையால் வந்த வினை! இப்படியா சிக்கல் வரனும்! -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்! -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு












Click it and Unblock the Notifications