அமெரிக்காவை அலறவிட நமக்கிருக்கும் ஒரே ஆயுதம்.. BRICS! மத்திய அரசு விழித்துக்கொள்ளுமா?
டெல்லி: இந்தியா மீது கூடுதல் வரி தொடர்பான அச்சுறுத்தலை அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளது. இந்த அச்சுறுத்தலை சமாளிக்கவும், அமெரிக்காவை எதிர்கொள்ளவும் இந்தியாவுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் பிரிக்ஸ் மட்டும்தான் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்கா நமக்கு மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியா என்று கேட்டால் ஆமாம் என்றுதான் சொல்ல முடியும். 2024-25 நிதியாண்டில், சுமார் 86.51 பில்லியன் டாலர்கள் அளவுக்கு அமெரிக்காவுக்கு நாம் நம் நாட்டின் பொருட்களை விற்பனை செய்துள்ளோம்.

ஆனால் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் பொருட்களின் மதிப்பு 45.33 பில்லியன் டாலர்கள்தான். அதாவது பாதிக்கு பாதி அளவுக்கு அமெரிக்காவின் பொருட்களை நாம் குறைவாக வாங்குகிறோம். இதுதான் அமெரிக்கா நம் மீது ஆத்திரமடைய முக்கிய காரணம். நாங்கள் வாங்கும் அளவுக்கு எங்கள் பொருட்களை நீங்களும் வாங்க வேண்டும் என்று கோருகிறது. மேலோட்டமாக பார்த்தால் எல்லாம் ஓகே போல தோன்றும். ஆனால் உண்மையில் அப்படி கிடையாது.
ஏனெனில் அமெரிக்க டாலரின் மதிப்பும், இந்திய ரூபாயின் மதிப்பும் சமமா? இன்றைய தேதியில் 86 ரூபாய் கொடுத்தால்தான் ஒரு அமெரிக்க டாலர் கிடைக்கும். அப்படியெனில் நமக்குதான் டாலர்கள் தேவை. எனவே நம்முடைய பொருட்களை அதிக அளவில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து, அதன் மூலம் டாலர்களை பெற்று வருகிறோம். இந்தியாவின் கரன்சி அமெரிக்காவுக்கு அவசியமில்லை. எனவே, நம்மை போன்று பொருட்களை விற்றுதான் வாழ வேண்டும் என்று அமெரிக்காவுக்கு கட்டாயம் கிடையாது.
எனவேதான் நாம் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரியை போட்டு, அந்நாட்டு வர்த்தகத்திற்கு மூக்கணாங்கயிறு போட்டு கட்டிருக்கிறோம். இதெல்லாம் தெரிந்தும் கூட, இந்தியா எங்களுடன் வர்த்தகம் செய்யவில்லை, எனவே நாங்கள் கூடுதல் வரியை போடுகிறோம் என்று டிரம்ப் மிரட்டியுள்ளார். அப்படியெனில் சொந்த கரன்சியில் வர்த்தகம் செய்ய இந்திய முன் வர வேண்டும். அதாவது அமெரிக்க டாலரை கொடுத்துதானே அந்நாட்டு பொருட்களை நாம் வாங்ககிறோம். அதேபோல ரூபாயை கொடுத்து நம்மூர் பொருட்களை அமெரிக்கா வாங்க வேண்டும்.
இதெல்லாம் நடக்குற கதையா? எனவே இந்தியா பிரிக்ஸ் பக்கம் முழுமையாக திரும்பி, ஆசிய நாடுகளுடன் வணிகத்திலும், இதர பல விஷயங்களிலும் ஒன்றிணைய வேண்டும். அப்படி நடந்தால் மட்டும்தான் நம்மால் அமெரிக்காவின் கொட்டத்தை அடக்க முடியும். குறிப்பாக பிரிக்ஸ் நாடுகளுக்கு என தனி கரன்சியை உருவாக்க இந்திய முன்வர வேண்டும். இப்போது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் செட் ஆகவில்லை என்பது உண்மைதான். இருப்பினும் சீனாவை விட அமெரிக்க ஆபத்தானது.
எனவே சீனாவுடன் கைகோர்த்து, அமெரிக்காவை வீழ்த்த வேண்டும். இந்த கைகோர்ப்பில், இந்தியா தனது தனித்தன்மையை இழந்துவிடக்கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரிக்ஸ் நாடுகளுக்கு என தனியாக கரன்சி உருவானால், அதை வைத்து டாலரின் ஆதிக்கத்தை குறைத்துவிடலாம். அப்புறம் அமெரிக்கா எவ்வளவு வரியை போட்டாலும் அது நமக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தரைதட்டிய பிட்காயின்.. மைக்ரோஸ்ட்ராடஜி நிறுவனம் செய்த சம்பவம்.. கிரிப்டோ முதலீட்டாளர்கள் ஷாக்! -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications