பிரிக்ஸ் காட்டும் புதிய பாதை.. எலக்ட்ரானிக் ஏற்றுமதியில் இந்தியா சாதனை! கப்சிப் அமெரிக்கா!
டெல்லி: அமெரிக்காவின் வரி நெருக்கடி காரணமாக பிரிக்ஸ் நாடுகளுடன் இந்தியா நெருக்கமான வர்த்தக உறவை மேம்படுத்த தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், எலக்ட்ரானிக் ஏற்றுமதியில் இந்தியா புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. 50% வரி போட்டும் இது எப்படி சாத்தியமானது? என அமெரிக்கா விழிபிதுங்கி உள்ளது.
இந்தியாவின் ஸ்மார்ட்போன் அல்லாத எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, 2024-25 நிதியாண்டில் 14 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளது. இது நாட்டின் மொத்த எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் சுமார் 36% ஆகும் என எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணினி மென்பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ESC) தெரிவித்துள்ளது.

IANS வெளியிட்ட செய்தியின்படி, மொத்த எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 38.57 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 32.5% வளர்ச்சியைக் காட்டுகிறது. ஸ்மார்ட்போன் தவிர்த்து, சூரிய மின்சக்தி பேனல்கள், தொலைத்தொடர்பு உபகரணங்கள், மருத்துவ சாதனங்கள், பேட்டரிகள் மற்றும் டிஜிட்டல் செயலாக்க யூனிட்கள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ESC தரவுகளின்படி, ஒளிமின்னழுத்த செல்கள் 1.12 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், தொலைத்தொடர்பு உபகரணங்கள் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் ஈட்டியுள்ளன. ரெக்டிஃபையர்கள், இன்வெர்ட்டர்கள் மற்றும் சார்ஜர்கள் சேர்ந்து 2.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக வருமானம் ஈட்டியுள்ளன.
மருத்துவ எலக்ட்ரானிக்ஸ் 0.4 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், தனிநபர் கணினிகள் மற்றும் டிஜிட்டல் செயலிகள் 0.81 பில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டில் 6.73% ஆக இருந்த இந்தியாவின் மொத்த வர்த்தக ஏற்றுமதியில் எலக்ட்ரானிக்ஸ் துறை தற்போது 9% பங்களித்துள்ளது. இது மிகப்பெரிய வளர்ச்சியாகும். கடந்த ஆண்டை காட்டிலும் நாம் கூடுதல் வர்த்தகத்தை செய்திருக்கிறோம். இத்தனைக்கும் இந்தியா மீது அமெரிக்கா 50% பொருளாதார தடை விதித்த பின்னரும் இது சாத்தியமாகியிருக்கிறது என்பதுதான் இதில் கவனிக்கத்தக்கது.
இந்த ஏற்றுமதியில் சுமார் 12% ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றிருக்கின்றன. இது பிரிக்ஸில் புதியதாக இணைந்த நாடு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இது தவிர நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கும் நாம் ஏற்றுமதியை அதிகரித்திருக்கிறோம். இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவெனில் இந்தியாவின் மொத்த எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ்நாடு 30% பங்கு வகிக்கிறது என்பதுதான்.
அமெரிக்காவின் வரியாக இருந்தாலும் சரி, இதர பெரிய நாடுகளின் மிரட்டலாக இருந்தாலும் சரி, இந்தியா வளர்ச்சியை இலக்காக வைத்து முன்னேறும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அதிலும் குறிப்பாக பிரிக்ஸ் நாடுகளுடனான கூட்டணி நமக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுக்க தொடங்கியிருக்கிறது. பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையில் வர்த்தகம் செய்யும் போது சொந்த கரன்சியில் வர்த்தகம் செய்ய நாம் முயற்சித்து வருகிறோம். ரஷ்யாவுடனான வர்த்தகத்தில் இது சாத்தியமாகியிருக்கிறது.
சீனாவுடனும் இதை சாத்தியமாக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அடுத்த பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் என அடுத்தடுத்த நாடுகளுடன் நாம் சொந்த கரன்சியில் வர்த்தகம் செய்தால் அதன் மூலம் நம்முடைய பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் வளரும். மட்டுமல்லாது, அமெரிக்காவின் வரி நமக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது. அமெரிக்க அச்சுறுத்தலுக்கு மாற்று பிரிக்ஸ் நாடுகள்தான் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications