நெற்றி நிறைய சந்தனம்.. தம்பி வருண் காந்தியை பார்த்ததும் ராகுல் தந்த ரியாக்சன்! சுவாரசிய மீட்டிங்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் எம்பியான ராகுல் காந்தி கேதார்நாத் கோவிலுக்கு சென்ற நிலையில் அங்கு தம்பி வருண் காந்தி மற்றும் அவரது மகளை திடீரென சந்தித்து மகிழ்ச்சியாக கலந்துரையாடியுள்ளார். நீண்டகாலத்துக்கு பிறகு இருவரும் சந்தித்த நிலையில் அதுபற்றிய நெகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பெயர் ராஜீவ் காந்தி. இளைய மகன் பெயர் சஞ்சய் காந்தி. இருவரின் மீது இந்திரா காந்திக்கு அதீத பிரியம் உண்டு. ஆனாலும் இந்திரா காந்தி தனது அரசியல் வாரிசாக இளைய மகன் சஞ்சய் காந்தியை தேர்வு செய்தார்.

ஆனால் எதிர்பாராத விதமாக 1908ல் நடந்த விமான விபத்தில் சஞ்சய் காந்தி காலமானார். இதையடுத்து ராஜீவ் காந்தி அரசியல் பிரவேசம் செய்தார். தாய் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு ராஜீவ் காந்தி பிரதமரானார்.
இந்த வேளையில் ராஜீவ் காந்தியின் குடும்பத்துக்கும், சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்திக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. இதையடுத்து மேனகா காந்தி தனது மகன் வருண் காந்தியுடன் பிரிந்தார். ராஜீவ் காந்தி அவரது மனைவி சோனியா காந்தி, மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோருடனானான பந்தத்தை துண்டித்தார்.
மேலும் மேனகா காந்தி, வருண் காந்தி ஆகியோர் பாஜகவில் இணைந்து செயல்பட தொடங்கினர். மேனகா காந்தி மத்திய அமைச்சரானார். அதேபோல் வருண் காந்தி உத்தர பிரதேச மாநிலம் பிலிபட் தொகுதி எம்பியாக இருக்கிறார். தற்போது மேனகா காந்தி, வருண் காந்தி ஆகியோர் பாஜகவிடம் இருந்து தள்ளியே இருந்து வருகின்றனர். மேலும் அவ்வப்போது வருண் காந்தி மத்திய அரசின் நடவடிக்கையை விமர்சனம் செய்தும் வருகிறார்.
இந்நிலையில் தான் ராகுல் காந்தி 3 நாள் பயணமாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனுக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அவர் கேதார்நாத்தில் உள்ள கோவிலுக்கு சென்றார். அங்கு அவர் வழிபாடு செய்தார். இந்த வேளையில் அங்கு தம்பி வருண் காந்தியும் சென்றார். இருவரும் நெற்றி நிறைய சந்தனத்துடன் இருக்கும் போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவின.
இதற்கிடையே தான் கேதார்நாத்தில் ராகுல் காந்தி தனது தம்பியான வருண் காந்தியை நேரில் சந்தித்து கொண்டனர். இந்த வேளையில் அவர்கள் புன்னகைத்து பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர். அண்ணன்-தம்பியாக இருந்தாலும் கூட இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக சந்திப்பது கிடையாது. நீண்ட காலத்துக்கு பிறகு இருவரும் சந்தித்து கொண்டதால் அவர்கள் சிறிது நேரம் பேசி கொண்டிருந்தனர்.
இவர்களின் இந்த சந்திப்பு என்பது பொதுவெளியில் நடந்தது. இந்த வேளையில் வருண் காந்தியின் மகளை பார்த்த ராகுல் காந்தி புன்னகைத்து சில நிமிடங்கள் பேசி கொண்டிருந்தார். இந்த சந்திப்பின்போது இருவரும் அரசியல் சார்ந்து எதுவும் பேசவில்லை. மாறாக அவர்கள் அண்ணன்-தம்பி என்ற முறையில் சிறிது நேரம் மகிழ்ச்சியாக பேசியுள்ளனர். குடும்பத்தினர் இடையே மனஸ்தாபம் இருந்தாலும் கூட ராகுல் காந்தி, வருண் காந்தி இடையே நீண்டகாலம் நல்ல உறவு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தான் இந்த சந்திப்பு என்பது நடந்துள்ளது.
முன்னதாக பாஜக மீது தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த வருண் காந்தி காங்கிரஸ் கட்சியில் இணைந்து அண்ணன் ராகுல் காந்தியுடன் கட்சியை வளர்க்க போவதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக பாரத் ஜோடோ யாத்திரையில் வருண் காந்தி பங்கேற்பதாக தகவல் பரவியது. இது நடக்காத நிலையில் ராகுல் காந்தியிடம், வருண் காந்தி குறித்து கேள்வி எழுப்பபட்டது.
அதற்கு ராகுல் காந்தி ‛‛ எனது சித்தாந்தம் என்பது வருணின் சிந்தாத்ததுடன் பொருந்தாது. இருப்பினும் வருண் அத்தகைய சித்தாந்தத்தை பின்பற்றி வருகிறார். ஆர்எஸ்எஸ் சிறப்பான பணிகளை செய்து வருகிறது என என்னிடம் வருண் காந்தி பல ஆண்டுகளுக்கு முன்பாக சொல்ல முயற்சித்தார். அப்போது நம் குடும்பம் எதற்காக போராடுகிறது என்பதை நீங்கள் படித்து இருந்தால் இப்படி சொல்ல மாட்டீர்கள் என தெரிவித்தேன். ஆனால் காங்கிரஸின் சித்தாந்தத்தை ஏற்று யார் வேண்டுமானாலும் கட்சியில் இணையலாம்’’ என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கேரளா போனவருக்கு.. இங்கே வர டைம் இருக்காதா.. சொதப்பும் காங்.. ஸ்டாலினை தவிக்கவிடுகிறாரா ராகுல்? -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி











Click it and Unblock the Notifications