வங்கதேச மாணவர் தலைவரை கொன்றவர்.. இந்தியாவுக்கு தப்பி வந்தாரா? BSF மறுப்பு!
டெல்லி: வங்கதேசம் தற்போது மீண்டும் பற்றி எரிகிறது. வங்கதேசத்தில் மாணவர் தலைவரை கொன்றதால் இந்த கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. கொலையாளி இந்தியாவுக்கு தப்பியதாக, அந்நாட்டு அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டை இந்திய எல்லை பாதுகாப்புப் படை மறுத்திருக்கிறது.
இன்குலாப் மோன்சோ எனும் அமைப்பின் மாணவர் தலைவர், ஷெரீப் உஸ்மான் ஹாடி சமீபத்தில் கொலை சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இவர் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வந்தார். பிப்ரவரியில் நடைபெறும் தேர்தலில் அவர் போட்டியிடுவதாக இருந்தது. இப்படி இருக்கையில்தான் அவர் கொலை செய்யப்பட்டார்.

கொலையாளிகள் மேகாலயாவிற்குள் நுழைந்துவிட்டதாக வங்கதேசக் காவல்துறை குற்றம்சாட்டியிருந்தது. இந்த கருத்து ஆதாரமற்றது மற்றும் தவறானது என மேகாலயா எல்லை பாதுகாப்புப் படையின் தலைவர், ஆய்வாளர் ஜெனரல் ஓ.பி. உபாத்யாய் தெரிவித்திருக்கிறார்.
வங்கதேச போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், ஹாடி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு முக்கிய சந்தேக நபர்கள், உள்ளூர் கூட்டாளிகளின் உதவியுடன் ஹாலுவாஹாட் எல்லையைக் கடந்து மேகாலயாவிற்குள் நுழைந்துள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால், ஹாலுவாஹாட் வழியாக சர்வதேச எல்லையைக் கடந்து எவரும் மாநிலத்திற்குள் வந்ததற்கு ஆதாரம் இல்லை. நாங்கள் அப்படியான சம்பவம் எதையும் கண்டறியவில்லை என உபாத்யாய் தெரிவித்திருக்கிறார்.
மேகாலயா போலீஸ் அதிகாரி கூறுகையில், "சந்தேக நபர்கள் கரோ ஹில்ஸ் பகுதியில் இருப்பது குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. உள்ளூர் காவல் பிரிவுகள் அத்தகைய நடமாட்டத்தை கண்டறியவில்லை" என்று குறிப்பிட்டார். இந்த விவகாரம் குறித்து மத்திய புலனாய்வு அதிகாரிகளுடன் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக பேசி வருவதாகவும் கூறியுள்ளார்.
அண்டை நாட்டின் அமைதியற்ற, பதட்டமான சூழலால், எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள பிஎஸ்எஃப் படையினர் எப்போதும் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த சர்வதேச எல்லை தொடர்ந்து முழு கண்காணிப்பில் உள்ளதாகவும், சட்டவிரோத எல்லை தாண்டிய எந்தவொரு முயற்சியும் உடனடியாக கண்டறியப்பட்டு உரிய முறையில் கையாளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். கரோ ஹில்ஸ் பகுதி, மேகாலயாவின் மேற்கில் உள்ளது. இது வங்கதேசத்துடன் சர்வதேச எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications