டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடக்க வேண்டும்.. ஒத்துழையுங்கள்.. மோடி கோரிக்கை!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார்.

நாளை காலை இடைக்கால மத்திய பட்ஜெட் லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. பல முக்கிய அறிவிப்புகள் இதில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Budget 2019: Lok Sabha has to go smoothly tomorrow, Please co-operate asks PM Modi

இதற்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்து இருக்கிறது. அதேசமயம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாளை லோக்சபாவில் அமளியில் ஈடுபட வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். பட்ஜெட்டிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்க வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் இந்த பட்ஜெட் கூட்டம் குறித்து பிரதமர் மோடி பேட்டியளித்து இருக்கிறார்.

அதில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட் ஆகும் இது.இதை சுமுகமாக நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மக்களின் நலனுக்காவும் அரசின் கொள்கைகளை நிறைவேற்றவும் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இடைக்கால பட்ஜெட் மூலம்தான் அரசு அடுத்தகட்ட பணிகளை செய்ய முடியும்.

இதனால் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் உறுப்பினர்கள் செயல்பாடு இருக்க வேண்டும், உறுப்பினர்கள் யாரும் அவையில் பிரச்சனை ஏற்படும் வகையில் செயல்பட கூடாது, என்று பிரதமர் மோடி கோரிக்கை வைத்து இருக்கிறார்.

English summary
Budget 2019: Lok Sabha has to go smoothly tomorrow, Please co-operate asks PM Modi to opponents.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X