25,000 கி.மீ. தொலைவுக்கு புதிய தேசிய நெடுஞ்சாலைகள்.. பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
டெல்லி: போக்குவரத்து உட்கட்டமைப்புகளை உருவாக்க 25,000 கி.மீ. தொலைவுக்கு புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2022- 2023 மத்திய பொது பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். நான்காவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முதல் பெண் நிதி அமைச்சர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

பட்ஜெட் தாக்கல்
பட்ஜெட் உரையில் தொடக்கத்தில் பேசிய நிர்மலா சீதாராமன் கொரோனா தடுப்பூசிகள் முழு வீச்சில் போடப்படுவதால் கொரோனா குறைந்துள்ளது என்று கூறினார். அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

25,000 கி.மீ. தொலைவுக்குதேசிய நெடுஞ்சாலைகள்
இதனை தொடர்ந்து முழுவதும் டிஜிட்டல் முறையிலான காகிதம் அல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அப்போது போக்குவரத்து கட்டமைப்புகள் குறித்து நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். போக்குவரத்து உட்கட்டமைப்புகளை உருவாக்க 25,000 கி.மீ. தொலைவுக்கு புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

நெடுஞ்சாலை திட்டங்களில் அதிக கவனம்
2025 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் இரண்டு லட்சம் கி.மீ தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்கும் திட்டத்தை கட்கரி உறுதிப்படுத்தியதன் மூலம், சமீப காலங்களில் மத்திய அரசின் கதி சக்தி திட்டத்தின் கீழ் சாலை மற்றும் நெடுஞ்சாலை திட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் உள்கட்டமைப்பு இணைப்புத் திட்டங்களின் ஒருங்கிணைந்த செயலாக்கத்திற்காக 16 அமைச்சகங்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்ட டிஜிட்டல் திட்டத்தை கதி சக்தி திட்டத்தில் செயப்படுத்தப்பட்டு வருகிறது
Recommended Video

400 புதிய ரயில் சேவைகள்
நாட்டில் சிறந்த மற்றும் பரந்த நெடுஞ்சாலை சரக்குகள் மற்றும் இங்குள்ள மக்களுக்கு விரைவான மற்றும் சீரான போக்குவரத்துக்கான திறனைக் கொண்டுள்ளது. புதிய நெடுஞ்சாலைகள் நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கும் வளர்ச்சியை கொண்டு செல்ல முடியும் என்பது குறிபிடத்தக்கது.
வந்தே பாரத் திட்டம் மூலம் 400 புதிய ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று அவர் கூறினார். மெட்ரோ ரயில் திட்டங்கள் புதிய வசதிகளுடன் செயல்படுத்தப்படும் என்று கூறிய அவர் இதேபோல் உள்ளூர் வணிகங்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகளுக்கு உதவும் வகையில் ஒரு ரயில் நிலையம், ஒரு உற்பத்திப் பொருள் என்ற போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications