Budget 2022: துரோகமிழைத்த பட்ஜெட் பாக்கெட்டில் பணமில்லை “நத்திங் பட்ஜெட்” - போட்டு தாக்கிய காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி : மாதச் சம்பளம் பெறுவோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு துரோகம் இழைப்பதாக மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் உள்ளது என காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

2022-23 ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் வேலைவாய்ப்பு, நதிநீர் இணைப்பு, ஏழை மக்களுக்கு வீடு, 5ஜி சேவை உட்பட பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றிருந்தது.

அதேவேளையில், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் மாத ஊதியம் பெறுவோர் பெரிதும் எதிர்பார்த்த வருமான வரி விலக்கு உச்சவரம்பு குறித்த அறிவிப்பு எதுவும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை எனவும், இது மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.

பட்ஜெட் 2022

பட்ஜெட் 2022


இந்த நிலையில் மக்களுக்கு மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் துரோகம் இழைத்ததாக காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. மத்திய அரசு தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமர் நரேந்திர மோடியும் நாட்டில் மாதச் சம்பளம் பெறும் மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு எந்த நிவாரண நடவடிக்கைகளை அறிவிக்காமல் துரோகம் இழைத்ததாக குற்றம் சாட்டியுள்ளது.

துரோகம் இழைத்த பட்ஜெட்

துரோகம் இழைத்த பட்ஜெட்

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளருமான ரந்தீப் சுர்ஜேவாலா, ஊதியக் குறைப்பு மற்றும் உயர் பணவீக்கம் காரணமாக சம்பளம் பெறுவோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என் கூறியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவின் சம்பளம் பெறும் வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கம் தொற்றுநோய், முழு ஊதியக் குறைப்பு மற்றும் பணவீக்கத்தை முறியடிக்கும் காலங்களில் நிவாரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். நிதியமைச்சர் மற்றும் பிரதமர் நேரடி வரி நடவடிக்கைகளால் அவர்களை மீண்டும் ஆழமாக ஏமாற்றியுள்ளனர்" என்று பதிவிட்டுள்ளார்.

மக்களின் பாக்கெட் காலி

மக்களின் பாக்கெட் காலி

இந்தியாவின் சம்பளம் பெறும் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு துரோகம் செய்யும் பட்ஜெட் என குறிப்பிட்டுள்ள அவர், இதனை நத்திங் பட்ஜெட் என விமர்சித்துள்ளார். ஏழைகள் சம்பளம் வாங்குபவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், விவசாயிகள், இளைஞர்களின் பாக்கெட் காலியாக உள்ளது என கூறியுள்ள அவர் செலவினங்களை அதிகரிப்பதற்கும் சிறுதொழில் துறையை மேம்படுத்தவும் பட்ஜெட்டில் எதுவும் இல்லை எனவும், கிரிப்டோகரன்சி சட்டபூர்வமான தான் என்பது தெளிவாகத் தெரியாத நிலையில் அரசு எவ்வாறு லாபத்திற்கு வரி விதிக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிரிப்டோகரன்சி சட்டப்பூர்வமா?

கிரிப்டோகரன்சி சட்டப்பூர்வமா?

கிரிப்டோகரன்சி மசோதாவைக் கொண்டு வராமல் கிரிப்டோகரன்சி வரி விதிப்பது சட்டபூர்வமான என பதில் சொல்லுங்கள் நிதியமைச்சர் என கேள்வி எழுப்பியுள்ள அவர் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் கட்டுப்பாடு என்ன முதலீடுகளை பாதுகாப்பு என்னவானது அதன் வழிமுறைகள் என்ன என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Recommended Video

    Union Budget 2022 : யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?
     ஒன்றுமில்லாத பட்ஜெட்

    ஒன்றுமில்லாத பட்ஜெட்

    வேலையில்லா இளைஞர்களுக்கு ஒன்றுமில்லை விவசாயிகளுக்கு ஒன்றுமில்லை நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒன்றுமில்லை 2022 பட்ஜெட்டில் மீண்டும் நிர்மலா மேடம் தோல்வி அடைந்தார் என மக்களவை காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளதோடு. இது விவசாயிகளுக்கு எதுவுமே இல்லாத பட்ஜெட் எனவும் கார்ப்பரேட் மற்றும் பணக்காரர்களுக்கான பட்ஜெட் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+