மத்திய பட்ஜெட் 2023: அல்வாவில் மஞ்சள்..பட்ஜெட் நாளில் சிவப்பு..கோபுர பார்டர்..நிதியமைச்சர் குறியீடு
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் நாளில் தனது ஆடையின் நிறத்தின் மூலம் சுபமான அறிவிப்பு வெளியாகும் என்று உணர்த்தியுள்ளார்.
டெல்லி: சுப காரியங்கள் செய்யத் தொடங்கும் போது அதற்கேற்ப ஆடையின் நிறங்களை தேர்வு செய்வது இந்திய பெண்களின் பழக்கம். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் அதற்கு விதி விலக்கு அல்ல பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில் அவர் உடுத்தும் புடவையின் நிறத்தின் மூலம் குறியீடுகளை உணர்த்தி விடுவார். இன்றைய தினம் சிவப்பு நிற ஆடை அணிந்து வந்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் நிர்மலா சீதாராமன்.
பொதுவாகவே பெண்களுக்கு பட்டுப்புடவை, காட்டன் புடவைகள் மீது காதல் அதிகம். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் சிறப்பான தருணங்களில் பட்டுப்புடவை, காட்டன் புடவைகளை அதிகம் உடுத்துவார்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஒவ்வொரு முறையும் பட்ஜெட் தாக்கலின்போது, நிதியமைச்சர் உடுத்தும் சேலையை தவறாமல் மக்கள் கவனிப்பார்கள். பட்ஜெட் தாக்கலுக்கு வரும் போதே நிதியமைச்சர் இன்ன நிற புடவை உடுத்தி வந்து கொண்டிருக்கிறார் என்ற செய்திகளும் பரபரப்பாக வெளியாகும்.
இன்று காலை தன் பட்ஜெட் குழுவுடன் கேமரா முன்னால் தோன்றிய போது அடர் சிவப்பு நிற புடவை ப்ரௌன் நிற பார்டர் தங்க நிற ஜரிகை வைத்த புடவை அணிந்து சிவப்பு நிற தோல் பையுடன் காட்சி அளித்தார்.
கைத்தறி ஆடைகள் மீது நிர்மலா சீதாராமனுக்கு அலாதிப்பிரியம் உண்டு. சுப காரியங்களுக்கு பட்டுப்புடவைகள் அணிந்தாலும் பட்ஜெட் நாளில் கைத்தறி புடவைகளை அணிவார்.
பட்ஜெட் உரை தயாரிக்கும் முன்பு பாரம்பரியமாக அல்வா கிண்டும் பணி தொடங்கும். எந்த ஒரு நல்ல காரியம் நடக்கும் முன்பாக இனிப்போடு தொடங்க வேண்டும் என்ற பாரம்பரியம் உள்ளது. அதன்படி கடந்த 26ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டும் விழாவில் கலந்துகொண்டார். அப்போது,நிர்மலா சீதாராமன் பச்சை நிற பார்டர் கொண்ட இளம் மஞ்சள் நிற புடவை உடுத்தி இருந்தார். இரண்டுமே மங்களகரமான நிறங்கள்.
https://twitter.com/FinMinIndia/status/1618557969872080896
கடந்த 2019ஆம் ஆண்டு நிர்மலா சீதாராமன் தனது முதல் பட்ஜெட் தாக்கலின்போது தங்க நிற பார்டரில் இளஞ்சிவப்பு நிற மங்கல்கிரி பட்டுப் புடவை உடுத்தி இருந்தார். 2020ஆம் ஆண்டு மஞ்சள் நிற பட்டுபுடவை நீல நிற பார்டர் வைத்த புடவையை அணிந்து வந்து பட்ஜெட் தாக்கல் செய்தார்.
கடந்த 2021 ஆண்டு பட்ஜெட் நாளில் அவர் உடுத்தியிருந்த உடை சிகப்பு-வெள்ளை வர்ணம் கொண்டதாகும். இது பெங்காலில் லால் பாத் புடவை என்று அழைக்கப்படுகிறது. இந்தப் புடவையை மேற்கு வங்கப் பெண்கள் முகூர்த்த நாட்களில் அணிவது வழக்கம்.
இது குறிப்பாக மேற்கு வங்கத்தின் குல தெய்வமாக கொண்டாடப்படும் துர்கா தேவியுன். துர்கா பூஜை கொண்டாடப்படும் 10ம் நாளில் பெண்கள் அங்கு லால்-பாத் புடவை அணிந்து துர்க்கையம்மனுக்கு பிரியாவிடை கொடுப்பார்கள். அதே போல புடவையை கடந்த 2021 ஆம் ஆண்டு அணிந்திருந்தார். அது சில்க் காட்டன் போச்சம்பள்ளி புடவையாகும். கடந்த ஆண்டு மெரூன் நிற புடவை அணிந்திருந்தார் நிதியமைச்சர்.
இன்று காலையில் நிர்மலா சீதாராமன் தன் பட்ஜெட் குழுவினருடன் செய்தியாளர்கள் முன்னால் தோன்றிய போது அடர் சிவப்பு நிற புடவை அரக்கு நிற கோபுர பார்டர் அதில் மஞ்சள் நிற ஜரிகை வைத்து அணிந்திருந்தார்.
கோபுர பார்டர் புடவைகள் பொதுவாக பருத்தி, பட்டு இணைந்து நெய்யப்பட்டிருக்கும். சுப காரியங்கள் சிறப்பான நேரங்களின் போது இது போல புடவைகள் அணியப்படுகின்றன. இன்றைய பட்ஜெட்டின் போது அடர் சிவப்பு நிறத்தை அவர் தேர்ந்தெடுத்தது இந்த ஆண்டு தைரியமான மற்றும் நேர்மறையான பட்ஜெட் ஆக இருக்கும் என்ற குறியீட்டினை உணர்த்தும் விதமாக அணிந்து வந்திருந்தார்.
ஜோதிட ரீதியாக பார்க்கும் போது சிவப்பு நிறம் செவ்வாய் பகவானுக்கு உகந்தது. செவ்வாய் பகவான் தைரிய காரகர். எந்த காரியத்தையும் துணிச்சலுடன் செய்வதற்கு செவ்வாய் பகவானின் ஆசி தேவை. இன்றைய தினம் நிர்மலா சீதாராமன் சிறப்பாக மக்களுக்கு உகந்த பட்ஜெட் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.
கொரோனாவில் இருந்து மீண்ட பின்னர் தாக்கல் செய்யப்போகும் பட்ஜெட். அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால் மக்களின் மனங்கள் மகிழும் வகையில் சிறப்பான தரமான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications