Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு பக்கம் ராகுல் லண்டன் பேச்சு.. மறுபக்கம் அதானி விவகாரம்.. இன்று நாடாளுமன்றத்தில் என்ன நடக்கும்

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் அமர்வு இப்போது தொடங்கி நடைபெற்று வருகிறது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு இப்போது நடைபெறும் நிலையில், 6ஆம் நாள் அமர்வு இன்று கூடுகிறது. இன்றும் ராகுல் காந்தி விவகாரத்தை ஆளும் தரப்பு கையில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜன.31ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் இந்தாண்டின் முதல் நாடாளுமன்ற தொடர் ஆரம்பித்தது. நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை முதலில் தாக்கல் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து பிப். 1ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்தாண்டு பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது.

 மத்திய பட்ஜெட்

மத்திய பட்ஜெட்

பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு அமர்வுகளாக நடைபெறுகிறது. கடந்த மாதம் முதல் அமர்வு முடிந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை இரண்டாம் அமர்வு தொடங்கியது. இரண்டாம் அமர்வு தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்ட போதிலும் இன்னும் அவை நடக்கவில்லை. 5 நாட்களும் அவை ஒத்திவைக்கப்பட்டே வருகிறது. இதனால் அவை நடவடிக்கைகள் எதுவும் நடக்காமல் தொடர்ந்து முடங்கியே வருகிறது.

 ராகுல் லண்டன் பேச்சு

ராகுல் லண்டன் பேச்சு

தனது பாரத் ஜாடோ யாத்திரையை முடித்த ராகுல் காந்தி, அதன் பிறகு பிரிட்டன் சென்றார். அங்கு லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். குறிப்பாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், பிரிட்டன் நாடாளுமன்றங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் இந்தியாவில் நாடாளுமன்றம், நீதித்துறை ஒடுக்கப்படுவதாகச் சாடியிருந்தார். மேலும், ஆளும் தரப்பு மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்திருந்தார். இந்த விவகாரத்தைத் தான் இப்போது பாஜக கையில் எடுத்துள்ளது.

 ஆளும் தரப்பு

ஆளும் தரப்பு

இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நாடாளுமன்றத்தில் தனக்குப் பேச வாய்ப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்த ராகுல் காந்தி, அப்போது தனது பேச்சுக்கு விளக்கமளிப்பேன் என்று முதலில் கூறியிருந்தார். இருப்பினும், மன்னிப்பு கேட்கும் வரை நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியை பேச அனுமதிக்க மாட்டோம் என்று பாஜக தரப்பில் கூறுகின்றனர். மேலும், ராகுல் காந்தியை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

 நாடாளுமன்றக் குழுக் கூட்டம்

நாடாளுமன்றக் குழுக் கூட்டம்

இதற்கிடையே சனிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தி தனது லண்டன் பேச்சு குறித்து விரிவாகப் பேசினார். இந்திய ஜனநாயகம் குறித்து மட்டுமே பேசியதாகத் தெரிவித்த அவர், இதை வைத்துக் கொண்டு தன்னை "தேச விரோதி" என்று முத்திரை குத்த முடியாது என்றும் கூறினார். இந்தக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் கலந்து கொண்ட நிலையில், இந்தியாவின் ஜி20 தலைமை குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் தொடக்கத்தில், கமிட்டி உறுப்பினர்களுக்கு ஜி20 தலைமை பதவி குறித்து ஜெய்சங்கர் விளக்கியிருந்தார்.

அதானி

அதானி

ராகுல் காந்தி விவகாரத்தை ஆளும் தரப்பு எடுத்தால், எதிர்க்கட்சியினர் அதானி தரப்பை குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தனியார் நிறுவனம் பெற்ற கடன் விவரங்களை நாடாளுமன்றத்தில் தெரிவிக்க முடியாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இருப்பினும், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் 6ஆவது நாளாக இன்று நாடாளுமன்றம் கூடுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+