மத்திய பட்ஜெட் 2024: எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு.. முழு விவரம்
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 7வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பற்றி இங்கே பார்க்கலாம். அதிகபட்சமாக பாதுகாப்பு துறைக்கு ரூ.4.54 லட்சம் கோடியும், ஊரக வளர்ச்சிக்கு ரூ.2.65 லட்சம் கோடியும், வேளாண் துறைக்கு ரூ.1.51 லட்சம் கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. வரும் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இன்று 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.

இதில் அதிகபட்சமாக பாதுகாப்பு துறைக்கு அதிக நிதியானது ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறைக்கு ரூ.4.54 லட்சம் கோடியும், ஊரக வளர்ச்சிக்கு ரூ.2.65 லட்சம் கோடியும், வேளாண் துறைக்கு ரூ.1.51 லட்சம் கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளார்.
* பாதுகாப்பு - ரூ. 4.54 லட்சம் கோடி
* ஊரக வளர்ச்சி - ரூ. 2.65 லட்சம் கோடி
* வேளாண் - ரூ. 1.51 லட்சம் கோடி
* உள்துறை - ரூ. 1.50 லட்சம் கோடி
* கல்வி - ரூ. 1.25 லட்சம் கோடி
* ஐடி, டெலிகாம் - ரூ. 1.16 லட்சம் கோடி
* சுகாதாரத் துறை - ரூ.89,287 கோடி
* எரிசக்தி துறை - ரூ.68,769 கோடி
* சமூக நலன் துறை - ரூ.56,501 கோடி
* வணிகம், தொழில் துறை - ரூ.47,559 கோடி.
பிரதமர் மோடியின் 3.0 ஆட்சியில் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் ஆதரவோடு 3 வது முறையாக பிரதமர் மோடி பதவியேற்றுள்ளார். 3வது முறையாக மோடி பதவியேற்ற பின் முதல் பட்ஜெட்டை இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில், மொபைல் போன்கள், மொபைல் பிசிபிஏ மற்றும் மொபைல் சார்ஜர்கள் மீதான சுங்க வரி 15% ஆக குறைக்கப்படுகிறது என்பது உள்ளிட்ட பல சலுகைகள் இருந்தன. தங்கம், வெள்ளிகளுக்கான இறக்குமதி வரி 6 சதவிகிதம் ஆகவும் வைரத்திற்கு 6.4 சதவிகிதமாகவும் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரி 2 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது.
தங்கம், வெள்ளிக்கு தற்போது இறக்குமதி வரி 15 சதவிகிதமாக உள்ள நிலையில் 6 சதவிகிதமாக குறைக்கபட்டுள்ளது. அதேபோல வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 40 சதவிகிதத்தில் இருந்து 35 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. தொழில் முதலீட்டிற்கான ஏஞ்சல் வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது
வருமான வரியை பொறுத்தவரைக்கும், தனிநபர்களுக்கான வருமான வரிச்சலுகை நிலையான கழிவு ரூ.75 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதேபோன்று புதிய வருமான வரி முறையைப் பின்பற்றுவோருக்கான வரி நடைமுறையானது மாற்றி அமைக்கப்படுவதாக அறிவித்தார். இதன்படி ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் சம்பளம் வாங்குகிறவர்களுக்கு வரி கிடையாது.
இதேபோன்று ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் வருமானம் பெறுவோருக்கு 5 சதவிகிதம் வருமான வரி செலுத்த வேண்டும். ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வருமானம் பெறுவோருக்கு 10% வருமான வரியும், ஆண்டுக்கு ரூ. 10 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வருமானம் பெறுவோருக்கு 15 சதவிகிதம் வருமான வரியும், ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் முதல் ரூ 15 லட்சம் வருமானம் பெறுவோருக்கு 20% வரி செலுத்த வேண்டும் என்றும் ஆண்டுக்கு ரூ. 15 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்கள் என்றால் 30% வருமான வரி செலுத்த வேண்டும் என்று அறிவித்தார்.












Click it and Unblock the Notifications