"அன்றே கணித்த நிர்மலா சீதாராமன்".. சொன்னதெல்லாம் பலிக்குதே.. இதை கவனிச்சீங்களா? மாஸ் காட்டும் பாஜக
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். இது அவரது 7 வது பட்ஜெட்டாகும். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இத்தகைய சூழலில் தான் முன்கூட்டியே நிர்மலா சீதாராமன் கணித்த ஒரு விஷயம் இன்று நனவாகி பலித்து விட்ட நிலையில் இதுதான் பாஜக என அந்த கட்சியினர் உற்சாகமாகி உள்ளனர். அப்படி என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.
நரேந்திர மோடி 3வது முறையாக மீண்டும் பிரதமராகி உள்ளார். தற்போது மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இதில் மீண்டும் நிர்மலா சீதாராமன் மத்திய நிதி அமைச்சராகி உள்ளார். இதையடுத்து இன்று 2024-25ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. வருமான வரி செலுத்துவதில் பழைய வரி முறையில் மாற்றம் செய்யப்படவில்லை. புதிய வரி விதிப்பு முறையில் உச்சவரம்புகளில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கம், வெள்ளி, பிளாட்டினத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது.
சரி இந்த பட்ஜெட் அறிவுப்புகள் ஒரு புறம் இருக்கட்டும். வாங்க நாம் சொல்ல வந்த விஷயத்தை பார்க்கலாம். அதாவது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கணித்த ஒரு விஷயம் அப்படியே இன்று நடந்துள்ளது. இதனால் பாஜகவினர் உற்சாகமாகி உள்ளனர். மேலும் அன்றே கணித்த நிர்மலா சீதாராமன் என்று அவரை பாஜகவினர் புகழ்ந்து வருகின்றனர். அப்படி என்ன நடந்தது? என்று கேட்டால் நாம் 5 மாதங்கள் பின்னோக்கி செல்ல வேண்டும். அதாவது 2024 பிப்ரவரி மாதம் 1ம் தேதிக்கு நாம் செல்ல வேண்டும்.
அன்றைய தினம் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் 2.0 ஆட்சியில் கடைசி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாளாகும். அதாவது கடந்த பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். லோக்சபா தேர்தல் நடைபெற இருந்த நிலையில் அவர் இந்த இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் பாஜகவின் சாதனைகளை பட்டியலிட்டப்படி வந்தார். மேலும் 2027 ம் ஆண்டுக்குள் இந்தியாவை 'விக்சித் பாரத்' ஆக மாற்ற தமத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதனால் எங்களின் கவனம் என்பது "சப்கா சத், சப்கா விகாஸ்" என உள்ளது. ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் என்ற நான்கு பிரிவு மக்களின் மீது அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து வெளியேற அரசு உதவியுள்ளது. இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மக்கள் பாஜகவுக்கு அமோக ஆதரவு தந்து மத்தியில் ஆட்சி அமைக்க தேர்வு செய்வார்கள் வரும் ஜூலை மாதம் முழு பட்ஜெட் என்பது தாக்கல் செய்யப்படும். விக்சித் பாரத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான மேப் என்பது எங்கள் அரசாங்கத்தால் அன்றைய பட்ஜெட்டில் முன்வைக்கப்படும்’’ என்றார்.
நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சு அப்போது பெரும் கவனம் பெற்றது. இந்நிலையில் தான் கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி நிர்மலா சீதாராமன் கூறியது போலவே இந்த ஜூலையில் பாஜக தலைமையிலான கூட்டணியான மத்திய அரசின் பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications