‛எவ்வளவு கான்பிடென்ட் பாருங்க’.. பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் கூறிய வார்த்தை! எதிர்க்கட்சிகள் ஷாக்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்கலின்போது அவர் கூறிய ஒரு வார்த்தை என்பது வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தான் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும் என்ற 100 சதவீத உறுதியை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது. இதனால் எதிர்க்கட்சிகள் உறைந்துபோயின.

மத்திய இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இது அவரது 6வது பட்ஜெட்டாகும். தொடர்ந்து 6 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் பெண் நிதி அமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றதோடு, முன்னாள் பிரதமர் மொராஜி தேசாயின் சாதனையை அவர் சமன் செய்து அசத்திஉள்ளார்.

Budget 2024: Nirmala Sitharaman says our government to present Full Budget in July ahead of loksabha election

இந்நிலையில் தான் இன்றைய இடைக்கால பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இருப்பினும் நடுத்தர மற்றும் மாதாந்திர சம்பளதாரர்கள் எதிர்பார்த்த வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் கொண்டு வரப்படவில்லை என நிர்மலா சீதாராமன் கூறினார். அதோடு வருமான வரி உச்சவரம்பில் பழைய நிலையை தொடரும் என அவர் அறிவித்தார்.

இந்த பட்ஜெட் தாக்கலின்போது நிர்மலா சீதாராமன் வரும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து சில விஷயங்களை பேசியிருந்தார். அதாவது பட்ஜெட் உரையின் தொடக்கத்தில் ‛‛வரும் லோக்சபா தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு அமோக ஆதரவு தந்து மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்கள்'' என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தி இருந்தார்.

அதன்பிறகு பட்ஜெட்டின் இறுதியில் நிர்மலா சீதாராமன், ‛‛வரும் ஜூலை மாதம் முழு பட்ஜெட் என்பது தாக்கல் செய்யப்படும். விக்சித் பாரத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான மேப் என்பது எங்கள் அரசாங்கத்தால் அன்றைய பட்ஜெட்டில் முன்வைக்கப்படும்'' என்றார். நிர்மலா சீதாராமனின் இந்த வார்த்தைகள் எதிர்க்கட்சிகளை உறைய வைத்தன. அதோடு வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தான் நிச்சயம் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கையை நிர்மலா சீதாராமன் உறுதியாக வெளிப்படுத்தி இருந்தார்.

ஏனென்றால் ஜூலை மாத பட்ஜெட் என்பது நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டாகும். இந்த பட்ஜெட்டை மத்தியில் புதிதாக ஆட்சியை பிடிக்கும் அரசு தான் தாக்கல் செய்யும். அந்த வகையில் ஜூலை மாதம் முழு பட்ஜெட்டை நாங்கள் முன்வைப்போம் என நிர்மலா சீதாராமன் தனது உரையில் கூறியிருப்பது என்பது எதிர்க்கட்சிகளால் எங்களை வெல்ல முடியாது. மக்களின் ஆதரவு என்பது பாஜகவுக்கு தான் உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை மக்கள் நிச்சயம் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைக்க செய்வார்கள் என்ற ‛‛கான்பிடென்ட் லெவலை''வெளிப்படுத்தும் வகையில் இருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+