குழந்தைகளுக்கு புதிய சேமிப்பு திட்டம்.. அது என்ன என்பிஎஸ் வாத்சல்யா? பட்ஜெட்டில் குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது அவர் 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கான புதிய சேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்தார். என்பிஎஸ் வாத்சல்யா என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின் மூலம் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு சேமிப்பை ஏற்படுத்த முடியும்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று 2024-25ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். 3வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற நிலையில் முதல் பட்ஜெட் இதுவாகும். இதனால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

Budget 2024 union budget 2024 Nirmala Sitharaman

வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இருப்பினும் ஏஞ்சல் வரி நீக்கம் செய்யபப்ட்டுள்ளது. இதுதவிர குழந்தைகளுக்கான ஓய்வூதிய சேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்வதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

அதன்படி புதிய வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம்:- புதிய வருமான வரி விதிப்பு முறையில் நிலையான கழிவு (Standard Deduction) 50 ஆயிரமாக இருந்த நிலையில் இது ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் புதிய வருமான வரி விதிப்பில் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சமாக இருந்தால் 5 சதவீத வரி கட்ட வேண்டி இருந்தது. இது தற்போது ரூ.7 லட்சம் வரை உச்சவரம்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 10 சதவீத வருமான வரி இருந்தது. தற்போது ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் இருந்தால் மட்டுமே 10 சதவீத வருமான வரி செலுத்த வேண்டும்.

இதற்கு முன்பு ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சத்துக்கு 15 சதவீதம் வருமான வரி கட்டிய நிலையில் இனி ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் இருந்தால் மட்டுமே 10 சதவீத வரி செலுத்த வேண்டும் என புதிய வருமான வரி விதிப்பு முறையை பின்பற்றுவோருக்கு மட்டும் உச்சவரி வரம்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க ஏஞ்சல் வரி வசூலிப்பு முறை என்பது நீக்கம் செய்யப்பட்டுள்ளது.. இதுதவிர குழந்தைகளுக்கான ஓய்வூதிய சேமிப்பு திட்டம் என்பது அறிமுகம் செய்வதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதாவது இந்த பட்ஜெட்டில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கு என்பிஎஸ் வாத்சல்யா திட்டம் (NPS Vatsalya Scheme) திட்டம் கொண்டு வருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த திட்டம் என்பது சிறுவர்களுக்கான தேசிய ஓய்வூதிய திட்டமாகும்.

அதாவது 18 வயது நிரம்பாத குழந்தைகளுக்கு என்று அவர்களின் பெற்றோர் மற்றும் அவர்களின் பாதுகாவலர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். 18 வயது வரும் வரை குழந்தைகளின் வங்கி கணக்கில் இந்த ஓய்வூதிய பங்களிப்பு தொகையை முதலீடு செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன்பிறகு 18 வயது நிரம்பியதும் இது தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் குழந்தைகளின் பெயருக்கு மாற்றம் செய்யப்படும்.

இது ஒவ்வொரு குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பெற்றோர் சேமித்து வைக்க இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது என்பிஎஸ் எனும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பயன்பெற முடியும். இத்தகைய சூழலில் தான் 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் பயன்பெறும் வகையில் என்பிஎஸ் வாத்சல்யா திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக பட்ஜெட்டில் தெிரவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+