கடந்த ஆண்டு vs இந்த ஆண்டு.. மத்திய பட்ஜெட்டில் எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? ஓர் ஒப்பீடு!
டெல்லி: இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி இருக்கும் சூழலில், கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
நாட்டின் 2025-2026 நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அதில் நடுத்தர மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் விதமாக, ரூ.12 லட்சம் வரையிலான வருவாய்க்கு விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.

மேலும், பல்வேறு துறைகளுக்கும் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. விவசாயம் உள்ளிட்ட 3 முக்கிய துறைகளின் தேவையை பூர்த்திசெய்ய ஏ.ஐ. தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்படும், அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் புற்றுநோய் சிகிச்சை மையம் என்பது உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?
பாதுகாப்பு துறை - ரூ.4,91,732 கோடி
ஊரக வளர்ச்சி துறை - ரூ.2,66,817 கோடி
உள்துறை விவகாரம் - ரு.2,33,211 கோடி
விவசாயம் - ரூ.1,71,437 கோடி
கல்வி - ரூ.1,28,650 கோடி
சுகாதாரத்துறை - ரூ.98,311 கோடி
நகர்ப்புற வளர்ச்சி - ரூ.96,77 கோடி
தொழில்நுட்பம் & தொலைதொடர்பு துறை - ரூ.95,298 கோடி
மின்சாரம் - ரூ.81,174 கோடி
வணிகம் & தொழில்துறை - ரூ.65,553 கோடி
சமூக நீதி - ரூ.60,052 கோடி
ஆராய்ச்சி துறை - ரூ. 55,679 கோடி
கடந்த 2024-25ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்
பாதுகாப்புத்துறை - 4,54,773 கோடி ரூபாய்
ஊரக வளர்ச்சித்துறை - 2,65,808 கோடி ரூபாய்
வேளாண் துறை - 1,51,000 கோடி ரூபாய்
உள்நாட்டு விவகாரங்கள் - 1,50,000 கோடி ரூபாய்
கல்வித்துறை - 1,25,000 கோடி ரூபாய்
தொழில்நுட்பம் தகவல் தொடர்பு - 1,16,000 கோடி ரூபாய்
சுகாதாரத்துறை - 89,287 கோடி ரூபாய்
எரிசக்தி துறை - 68,769 கோடி ரூபாய்
சமூக நலத்துறை - 56,501 கோடி ரூபாய்
வணிகம் மற்றும் தொழில்துறை - 47,559 கோடி ரூபாய்
விண்வெளி சார்ந்த திட்டங்கள் - 1,000 கோடி ரூபாய்
நீர்பாசன வசதி திட்டங்கள் - 11,500 கோடி ரூபாய்
புதிய சாலை இணைப்பு திட்டங்கள் - 26,000 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

பாதுகாப்புத் துறை, உள்துறை, விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கு கடந்த ஆண்டை விட அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவை கல்வியில் ஊக்குவிக்கும் வகையில் ரூ.500 கோடி முதலீட்டில் ஒரு மையம் உருவாக்கப்படும்.அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் 'அடல் ஆய்வகங்கள்' அரசுப் பள்ளிகளில் உருவாக்கப்படும் என இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
5 தேசிய திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும், ஹீல் இன் இந்தியா (Heal in India) பிரச்சாரம் முன்னெடுக்கப்படும், பொருள் விநியோகம் செய்யும் டெலிவரி பணியில் உள்ள ஊழியர்களுக்கு மின்னணு அடையாள அட்டை வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் புதிய பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளன.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications