Budget 2025- 2026: குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2025- 2026-ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. முன்னதாக அவர் குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி சாரட் வண்டியில் புறப்பட்டார்.

நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இன்று நாடாளுமன்றத்தில் மக்களவையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு காலை 11 மணிக்கு இரு அவை உறுப்பினர்களும் கலந்து கொள்ளும் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற தொடங்கினார்.

budget 2025 union budget 2025 nirmala sitharaman 2025 2025



இதைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். 2025- 2026 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் 8ஆவது முறையாக தாக்கல் செய்கிறார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் பிப்ரவரி 3, 4 ஆகிய இரு தினங்கள் நடைபெறும். இந்த விவாதம் 3 நாட்கள் நடைபெறுகிறது. விவாதங்களுக்கு பிப்ரவரி 6ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்டம் 9 அமர்வுகளுடன் பிப்ரவரி 13 ஆம் தேதி முடிவடைகிறது. இரண்டாம் கட்ட அமர்வு மார்ச் 10 ஆம் தேதி முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒட்டுமொத்த பட்ஜெட் கூட்டத் தொடரில் 27 அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக குடியரசு தலைவர் மாளிகையிலிருந்து சாரியட் வண்டியில் புறப்பட்ட திரௌபதி முர்மு, நாடாளுமன்றத்தை வந்தடைந்தார். அவரை பிரதமர் நரேந்திர மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீஷ் தன்கர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதையடுத்து அவருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பிறகு அவர் உள்ளே அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு முன்பாக செங்கோல் கொண்டு செல்லப்பட்டது. ஒவ்வொரு முறையும் குடியரசு தலைவர் , நாடாளுமன்றத்திற்கு வரும் போது இந்த செங்கோல் கொண்டு செல்லப்படுவது மரபு ஆகும்.

இதையடுத்து நாடாளுமன்ற மைய மண்டபத்திற்கு வந்த முர்மு, தேசியக் கீதம் இசைக்த தனது உரையை தொடங்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+