உயிர் காக்கும் மருந்துகளின் விலை குறைகிறது! 36 மருந்துகளுக்கு சுங்க வரி ரத்து! பட்ஜெட்டில் அறிவிப்பு
டெல்லி: உயிர் காக்கும் 36 மருந்துகளுக்கு சுங்க வரி முற்றிலும் ரத்து செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
2025- 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அவர் 8ஆவது முறையாக இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

இந்த பட்ஜெட்டில் பீகாருக்கு நிறைய திட்டங்களை அள்ளிக் கொடுத்துள்ளார். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த அவரது பட்ஜெட் உரையில் ஒரு முக்கிய அறிவிப்பை கொடுத்துள்ளார்.
அதில் உயிர் காக்கும் 36 மருந்துகளுக்கான சுங்க வரி முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. இவை கேன்சர், அரிய வகை நோய்களை குணப்படுத்துவதற்கான அத்தியாவசிய மருந்துகளாகும்.
மேலும் 6 உயிர் காக்கும் மருந்துகள் பட்டியலில் 5 சதவீத சலுகை வரி பெறும் பட்டியலில் சேர்க்கப்படும். இதில் புற்றுநோய், அரிதான நோய்கள் உள்ளிட்டவைகளுக்கான மருந்துகளும் அடங்கும்.
இந்த மருந்துகளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் மொத்த மருந்துகளுக்கு முழு விலக்கு மற்றும் சலுகை வரி பொருந்தும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அது போல் கோபால்ட் உள்ளிட்ட அரிய வகை தாதுக்குளுக்கு வரி சலுகை கொடுக்கப்படும். இதனால் செல்போன்களுக்கான லித்தியம் பேட்டரியின் விலை குறையும் என அறிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் அடுத்த ஆண்டு இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரியில் 10 ஆயிரம் கூடுதல் இடங்கள் சேர்க்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 75 ஆயிரம் இடங்கள் சேர்க்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் உள்ள 23 ஐஐடி நிறுவனங்களில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 100 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. மேலும் 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு தொடங்கப்பட்ட 5 புதிய ஐஐடிகளில் மாணவர்களுக்கு கூடுதல் உள்கட்டமைப்பு உருவாக்கப்படும் என அறிவித்தார்.
மாவட்ட அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது போக அவர் கூறியிருப்பதாவது: முதியோருக்கான வட்டி வருவாய் ரூ 1 லட்சம் வரை வருமான வரி கிடையாது.
லித்தியம் பேட்டரிக்கான இறக்குமதி வரித்து செய்யப்பட்டுள்ளதால் எலெக்ட்ரிக் வாகனங்கள் விலை குறைய வாய்ப்புள்ளது. காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீடு வரம்பு 74 சதவீதம் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. வரி செலுத்துபவர்களுக்கு பல்வேறு வசதிகளை கடந்த 10 ஆண்டுகளாக நம் அரசு செய்து வருகிறது.
இனி மாதம் ரூ 1 லட்சம் வரை ஊதியம் வாங்குவோர் இனி வரி கட்டத் தேவையில்லை. தனிநபர் வருமான வரிக்கான உச்சவரம்பு ரூ 7 லட்சத்தில் இருந்து ரூ 12 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது என அறிவித்துள்ளார். அரசின் வரி விலக்கு அறிவிப்பால் ஆண்டுக்கு நேரடி வரி வருவாய் ரூ 1 லட்சம் கோடியும், மறைமுக வரி வருவாய் ரூ 260060 கோடியும் அரசுக்கு இழப்பு என்றும் நிர்மலா தெரிவித்துள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications