ஸ்விக்கி, சோமேட்டோ.. ஆன்லைன் செயலி ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு
டெல்லி: உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி, சோமேட்டோ ஊழியர்களுக்கு அரசு சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும் இந்த திட்டத்தின் மூலம் 1 கோடி பேர் பயன்பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இ ஷ்ரம் இணையதளம் வாயிலாக பதிவு செய்து பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். சரியாக 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி, சோமேட்டோ ஊழியர்களுக்கு அரசு சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 1 கோடி பேர் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ ஷ்ரம் இணையதளம் வாயிலாக பதிவு செய்து பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அடையாள அட்டை வழங்குவதன் மூலம், அமைப்பு சார தொழிலாளர்களாக உள்ள இந்த ஊழியர்களுக்கும் சமூக பாதுகாப்பு அளிக்கப்படும் வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிகிறது. கையில், கிக் (Gig) பணியாளர்கள் என அழைக்கப்படும் டெலிவரி ஊழியர்களுக்கான அறிவிப்பும் பட்ஜெட்டில் வெளியானது.
விபத்து, சுகாதாரம் போன்ற திடீர் பாதிப்புகளின் போது டெலிவரி ஊழியர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் திட்டங்களை வகுப்பது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது. எனவே, தற்போது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தின் மூலம், இது தொடர்பான பலன்களும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என எதிபார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications