வருமான வரி விலக்கு 12 லட்சம்: ஆனால் யாருக்கு எல்லாம் பொருந்தும் தெரியுமா?
டெல்லி: ஏழைகளுக்கு இலவச அரிசி, மாதம் மாதம் ஊக்கத்தொகை, மானிய திட்டங்கள் என அரசாங்கத்தால் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதேபோல் பணக்காரர்கள் தொழில் செய்ய பல சலுகைகள் தரப்படுகின்றன. ஆனால் நடுத்தர வர்க்கத்தினரை பொதுவாக அரசுகள் கவனிப்பதே இல்லை.. இந்த குறை முதல்முறையாக போக்கப்பட்டுள்ளது. 12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது எனறு அறிவிக்கப்பட்டுள்ளது. இது யாருக்கு எல்லாம் பொருந்தும் என்று பார்ப்போம்.
பொதுவாகவே ஒரு குற்றச்சாட்டு மத்திய மாநில அரசுகள் மீது உண்டு. ஏழைகளுக்கு மகளிர் உரிமை தொகை, முதியோர் உதவி தொகை, இலவச அரிசி, பருப்பு, தனியார் பள்ளியில் ஆர்டி மூலம் கட்டண சலுகை, இலவசமாக வீடு, மானிய விலையில் பல்வேறு திட்டங்கள் என பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதேபோல் பணக்காரர்களுக்கும் அரசு தொழில் தொடங்கவும், தொழில்களை மேம்படுத்தி பொருளீட்டவும், மானிய விலையில் இடம், வரி சலுகை, மின்சாரம் என பல சலுகைகளை அளிக்கிறது.

ஆனால் அரசாங்கத்தின் கஜானாவை நிரப்புவதில் பெரும்பங்கு வகிக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு சுதந்திரம் ஆனது முதலே பெரிதாக எந்த சலுகையும் கிடைத்தது இல்லை.. முதல்முறையாக அவர்களுக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி தந்துள்ளது மத்திய அரசு. வருமான வரி வரம்பை 12 லட்சம் ஆக உயர்த்தி உள்ளது. இதன் மூலம் 12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி கிடையாது. நடப்பு 2025-26 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ( பிப்ரவரி 1) காலை 11 மணிக்கு லோக்சபாவில் தாக்கல் செய்தார். இன்றைய பட்ஜெட்டின் இறுதியில் வருமான வரி உச்சவரம்பு குறித்து விளக்கம் அளித்தார். இதன்படியும் நிலையான வரிக்கழிவு 75 லட்சம் உள்ளதால் 12.75 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது. அதேநேரம் யாருக்கு எல்லாம் இது பொருந்தும் என்று பார்ப்போம்.
மாதச்சம்பளம் வாங்குவோர், அதாவது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சென்று மாதத்திற்கு ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்குவோருக்கு, அதாவது ஆண்டுக்கு 12.75 லட்சம் வரை சம்பளம் வாங்குவோருக்கு வருமான வரி கிடையாது. அதேபோல் தனியாக தொழில் தொடங்கி தொழில் மூலம் வருமானம் ஈட்டினாலும் ஆண்டுக்கு 12.75 லட்சம் வரை உள்ள வருமானத்திற்கு வரி கிடையாது.
ஆனால் பணத்தை வைத்து பணம் ஈட்டி வருமானம் ஈட்டுவோருக்கு இந்த வரிச்சலுகை கிடையாது. அதாவது பங்கு, பத்திரம் அல்லது ரியல் எஸ்டேட் போன்ற ஒரு சொத்தை விற்பதன் மூலம் வருமானம் ஈட்டினால் அவர்கள் வரி கட்ட வேண்டும்.. இன்னும் குறிப்பாக சொல்வது என்றால் மியூட்சுவல் பண்ட் மற்றும் பங்குகள் வாங்கி விற்று லாபம் ஈட்டியுள்ளீர்கள் என்றால், வீடு வாங்கி விற்று லாபம் ஈட்டியுள்ளீர்கள் என்றால், பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்து லாபம் ஈட்டி இருந்தால் அவர்களுக்கு பொருந்தாது.
அதேநேரம் 12 லட்சம் வரை சம்பளம் வாங்கும் ஊதியதாரர்கள் என்றால் புதிய வருமான வரி முறைப்படி, 12.75 லட்சம் வரை ப்ரூப் தர தேவையில்லை. வரி கிடையாது. அதாவது வரி முறைப்படி ரிபேட் செய்யப்படும். அதாவது தள்ளுபடி செய்யப்படும். ஏனெனில் புதிய வரிமுறையை தேர்வு செய்தவர்களுக்கு வரி ப்ரூப் தர வாய்ப்பே கொடுக்கவில்லை. எனவே புதிய வரி விதிப்பு திட்டத்தின்கீழ் கொண்டுவந்த இந்த 12.75 லட்சம் வரையிலான வருமான வரி சலுகை அறிவிப்பின்கீழ் ப்ரூப் தரவும் முடியாது. ப்ரூப் தேவையுமில்லை. 12 லட்சத்துக்கு மேலே ஊதியம் போகும்போது மட்டும், வரி இருக்கும். அதாவது முதல் நான்கு லட்சத்திற்கு பூஜியம் வரி.. அடுத்ததாக 4 முதல் 8 லட்சம் வரை உள்ள வருமானத்திற்கு 5 சதவீதம் வருமான வரி இருக்கும்.. அத்துடன் அடுத்த 8 லட்சம் முதல் 12 லட்சம் வரை உள்ள வருமானத்திற்கு 10 சதவீதம் வருமான வரி இருக்கும். 12 லட்சத்து 75 ஆயிரத்திற்கு உள்ள பணம் என்றால், 12 லட்சம் முதல் 13 லட்சம் வரை உள்ள பணத்திற்கு 15 சதவீத வருமான வரி கட்ட வேண்டியதிருக்கும்.












Click it and Unblock the Notifications