நிர்மலா சீதாராமனை நோக்கி நடந்து சென்று மோடி சொன்ன மேட்டர்.. கேட்டதுமே சிரித்த நிதி அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் புதிய வருமான வரி முறையில் ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை சம்பாதிப்போருக்கு வருமான வரி செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு நிர்மலா சீதாராமன் அமர்ந்திருந்த இருக்கையை நோக்கி நடந்து சென்ற பிரதமர் மோடி அவரிடம் சொன்ன வார்த்தை பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு முறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும்போதும் மிடில் கிளாஸ் மக்களுக்கு சில முக்கிய எதிர்பார்ப்புகள் இருக்கும். அன்றாட பயன்பாட்டுக்கு தேவையான பொருட்களின் விலை குறைய வேண்டும், வருமான வரிக்கான உச்ச வரம்பு அதிகரிக்கப்படுமா? என்பது தான். இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் வருமான வரி முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

budget 2025 union budget 2025 nirmala sitharaman 2025 2025

அதன்படி புதிய வருமான வரி முறையில் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை சம்பாதிப்போருக்கு வரி எதுவும் கிடையாது என்று அறிவித்துள்ளார். அதன்படி பார்த்தால் மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் வாங்குவோர் இனி வருமான வரி செலுத்த தேவையில்லை. இந்த அறிவிப்பு தான் இன்றைய பட்ஜெட்டில் ஹைலைட்டாக உள்ளது.

இப்போது இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகு அவர் அருகே சென்று பிரதமர் மோடி கூறிய வார்த்தை பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் காலை 11 மணிக்கு நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மதியம் 12.15 மணி வரை அவர் பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார். இந்த பட்ஜெட்டில் கடைசியாக தான் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை சம்பாதிப்போருக்கு வருமான வரி இல்லை என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

இந்த அறிவிப்பு வெளியானபோது மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் கோஷமிட்டு வரவேற்றனர். மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். அதன்பிறகு பட்ஜெட் தாக்கல் முழுவதுமாக முடிவடைந்தது. பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் அமர்ந்து இருந்த இருக்கையை நோக்கி நடந்து சென்றார். நிர்மலா சீதாராமன் அருகே சென்ற மோடி அவருக்கு நன்றி தெரிவித்தார்.

தனது 3.0 அரசின் முதல் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்திருப்பதற்கு நன்றி தெரிவித்த மோடி, ஒவ்வொருவரும் உங்களை பாராட்டுகின்றனர். பட்ஜெட் என்பது ரொம்ப நன்றாக இருக்கு என்று கூறினார். இதை கேட்டு பூரித்துபோன நிர்மலா சீதாராமன் சிரித்தபடி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த பட்ஜெட் தாக்கலின்போது நிர்மலா சீதாராமன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதாவது இந்த பட்ஜெட் என்பது 6 துறைகளில் சீர்த்திருத்தம் செய்யும் வகையில் உள்ளது. வரி விதிப்பு, மின்சாரம், நகர மேம்பாடு, கனிமங்கள், நிதித்துறை மற்றும் கொள்கைகள் ஆகியவற்றில் சீர்த்திருத்தம் கொண்டு வந்து இந்திய பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+