ரூ.14.82 லட்சம் கோடி கடன் வாங்க திட்டம்.. மத்திய அரசின் கடன் குறைகிறது.. சொல்கிறார் நிதியமைச்சர்!
டெல்லி: நாட்டின் ஜிடிபி உடன் ஒப்பிடும் போது மத்திய அரசின் கடன் குறைந்து கொண்டே வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நாட்டின் நிதி பற்றாக்குறை 4.8 சதவிகிதமாக இருப்பதாக கூறிய அவர், வரும் நிதியாண்டில் ரூ.14.82 கோடி கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. வேளாண்மை, மருத்துவம், சுற்றுலா என்று பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய திட்டங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நடப்பாண்டு இறுதியில் தேர்தல் வரும் பீகார் மாநிலத்திற்கு, எண்ணற்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் பேசுகையில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் நிதி பற்றாக்குறை 4.8 சதவிகிதமாக உள்ளது. இதனை 4.4 சதவிகிதமாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாட்டின் ஜிடிபி உடன் ஒப்பிடும் போது மத்திய அரசின் கடன் குறைந்து கொண்டே செல்வதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வரும் நிதியாண்டில் ரூ.14.82 லட்சம் கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து, போக்குவரத்து துறைக்கு ரூ.5.48 லட்சம் கோடியும், பாதுகாப்புத் துறைக்கு ரூ.4.91 லட்சம் கோடியும், வேளாண் துறைக்கு ரூ.1.71 லட்சம் கோடியும், கல்வித் துறைக்கு ரூ.1.28 லட்சம் கோடியும், சுகாதாரத் துறைக்கு ரூ.98,311 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் உள்துறைக்கு ரூ.2.33 லட்சம் கோடியும், ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ. 2.66 லட்சம் கோடியும், நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு ரூ.69,777 கோடியும், சமூக நலன் துறைக்கு ரூ.60,052 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications