இனி இதுதான் எதிர்காலமே.. செமிகண்டக்டர் துறைக்கு ரூ.40,000 கோடியை அள்ளி கொடுத்த நிர்மலா சீதாராமன்
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் பல முக்கியமான அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தது. குறிப்பாக எதிர்கால வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாக இருக்கும் செமிகண்டக்டர் துறை தொடர்பாகவும் முக்கிய அறிவிப்புகள் வெளியானது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 9வது முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். நாடாளுமன்றத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையைத் தாக்கல் செய்தார். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 9வது பட்ஜெட்டாகும். இதன் மூலம், அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் 10 பட்ஜெட்கள் சாதனையை அவர் நெருங்குகிறார். இதில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தது.

செமிகண்டக்டர்
இந்த நவீனக் காலத்தில் செமிகண்டக்டர் மிக முக்கியமான துறையாக உருவெடுத்துள்ளது. அதிநவீனக் கருவிகள் தொடங்கி எலக்டிரிக் கார்கள் வரை அனைத்திற்குமே செமிகண்டக்டர் அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது. இப்போது இந்தியா மட்டுமின்றி உலகமே செமிகண்டக்டர்களுக்கு சீனாவையே நம்பி இருக்கிறது. அதை மாற்ற மத்திய அரசு பிரதான நடவடிக்கையை எடுக்கப் போகிறது. இது குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.
மத்திய அரசு
இந்த பட்ஜெட்டில் செமிகண்டக்டர் துறைக்கு ரூ.40000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதேபோல சரக்கு வர்த்தகத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் கன்டெய்னர் உற்பத்திக்கு ரூ.10000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார். இரண்டுமே இந்தியாவுக்கு முக்கியமான அறிவிப்புகளாகவே பார்க்கப்படுகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் கூறுகையில், "இந்தியா செமிகண்டக்டர் மிஷன் 2.0 திட்டத்தை நாங்கள் தொடங்குவோம். தொழில்நுட்பம் மற்றும் திறமையான ஊழியர்களை உருவாக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். தொழில்துறை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்களில் கவனம் செலுத்துவோம்" என்றார்.
ரூ.40,000 கோடி
செமிகண்டக்டர் திட்டத்தின் வேகத்தை முழுமையாகப் பயன்படுத்த, இதற்கான நிதி ஒதுக்கீடு 40,000 கோடி ரூபாயாக அதிகரிக்கவும் மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இதன் மூலம் எதிர்காலத்திற்குத் தேவையான செமிகண்டக்டர் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.
அதேபோல, 2025-ஆம் ஆண்டில் ரேர் எர்த் மெடல்களுக்கு ஒரு திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது, கனிம வளம் நிறைந்த மாநிலங்களான ஒடிசா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில், பிரத்தியேகமான ரேர் எர்த் வழித்தடங்களை நிறுவப்பட்டு, மேம்படுத்தப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும், மத்திய அரசு வெறும் அறிவிப்புகளோடு நிறுத்தாமல் சீர்திருத்தப் பாதையைத் தேர்ந்தெடுத்ததாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளே விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) இலக்கை அடைய உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஐடி துறை அமைச்சர்
ஜனவரி 2022இல் தொடங்கப்பட்ட முதல் 'இந்தியா செமிகண்டக்டர் மிஷன்' திட்டத்தில் கீழ் மத்திய அரசு செமிகண்டக்டர் உற்பத்தியை ஊக்குவிக்கப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நடப்பு ஆண்டில் செமிகண்டக்டர் சிப் உற்பத்தியை இந்தியா தொடங்கும் என்று மத்திய ஐடி துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முன்பு கூறியிருந்தார். அதை மேலும் ஊக்குவிக்கும் வகையிலேயே மத்திய அகசின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications