75 ஆண்டு பாரம்பரியத்துக்கு இன்று குட்பை.. மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் செய்யும் மாற்றம்.. செம
டெல்லி: 2026-27ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் 75 ஆண்டு கால வழக்கத்தை மாற்றி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளதாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அப்படி என்ன நடக்கப்போகிறது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அந்த வகையில் 2026-27ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தான் இன்றைய பட்ஜெட் தாக்கலின்போது நிர்மலா சீதாராமன் நம் நாட்டின் 75 ஆண்டு கால பாரம்பரியத்தை மாற்றி எழுத உள்ளார். அதாவது மத்திய பட்ஜெட் பொதுவாக பாகம் ஏ, பாகம் பி என்று தாக்கல் செய்யப்படும்.
இதில் பாகம் ஏ ல் ஒவ்வொரு துறையிலும் அரசு ஒதுக்கும் நிதி, சீர்த்திருத்தங்கள் பற்றிய விவரங்கள் இருக்கும். பாகம் பி-யைஎடுத்து கொண்டால் வரி கொள்கைகள் குறித்த அறிவிப்புகள் இடம்பெறும். அதாவது தனி நபர் வருமான வரி சார்ந்த அறிவிப்புகள் பாகம் பி-யில் வரும்.
ஆனால் இந்த முறை நிர்மலா சீதாரமன் பாகம் பி பிரிவில் இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்காலத்திற்கான ஒரு விரிவான திட்டத்தை முன்வைப்பார் என்று கூறப்படுகிறது. அதன்படி குறுகிய கால மற்றும் நீண்ட கால பொருளாதார இலக்குகள் குறித்த விஷயங்களை நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் வழக்கமான வரி சீர்த்திருத்தங்களுக்கு அப்பால் விரிவான செயல் திட்டத்தை மக்களுக்கு நிர்மலா சீதாராமன் எடுத்து உரைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மத்தியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்து பட்ஜெட்டில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு வருகிறது. ரயில்வே தனி பட்ஜெட் கேன்சல் செய்யப்பட்டு பொதுபட்ஜெட்டுன் இணைக்கப்பட்டது. பட்ஜெட் தேதி பிப்ரவரி 1ம் தேதிக்கு மாற்றப்பட்டது. பட்ஜெட் தாக்கலுக்கு நிதி அமைச்சர்கள் சூட்கேஸ் எடுத்து செல்லும் முறை மாற்றப்பட்டது. தோல் சூட்கேஸ்க்கு பதில் சிவப்பு துணியால் உருவாக்கப்பட்ட பஹி - காதா பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த பட்ஜெட் நிர்மலா சீதாராமனின் 9 வது பட்ஜெட்டாகும். இதுவரை அவர் 8 பட்ஜெட்டுகளை தொடர்ந்து தாக்கல் செய்த நிலையில் இன்று 9 துபட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதன்மூலம் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரத்தை சமன் செய்கிறார். ப சிதம்பரம் இதுவரை மொத்தம் 9 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார்.
நம் நாட்டில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சியின் மொராஜி தேசாய் 10 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார். நிர்மலா சீதாராமன் நாளை தனது 9 வது பட்ஜெட்டை தாக்கல் செய்யும் பட்சத்தில் மொராஜி தேசாய்க்கு பிறகு அதிகபட்சமாக பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற பெருமையை ப சிதம்பரத்துடன் பகிர்ந்து கொள்ள உள்ளார். அதுமட்டுமின்றி நம் நாட்டில் மத்திய நிதி அமைச்சராக அதிக பட்ஜெட்டை தாக்கல் செய்த பெருமையை ஏற்கனவே நிர்மலா சீதாராமன் பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications