Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவைக்காரின் பெருமை.. முதல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழர்.. யார் தெரியுமா? 12 சுவாரசியம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்று பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில் தான் சுதந்திர இந்தியாவுக்கே முதல் பட்ஜெட்டை அறிமுகம் செய்தவர் கோவையில் பிறந்த ஆர்கே சண்முகம் செட்டி என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். அவர் யார்? பின்னணி என்ன? என்பது உள்பட பட்ஜெட் தொடர்பான சில சுவாரசிய விஷயங்களை புல்லட் பாயிண்ட்டில் தெரிந்து கொள்ளலாம்.

நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் தொடர்ந்து தாக்கல் செய்யும் 9 வது பட்ஜெட்டாகும். இந்த பட்ஜெட்டின் மூலமாக இந்தியாவில் அதிகமாக பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் பட்டியலில் ப சிதம்பரத்துடன் 2வது இடத்தை நிர்மலா சீதாராமன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

budget 2026 union budget 2026 2026 2026

இந்த பட்டியலில் முதலிடத்தில் மொராஜி தேசாய் உள்ளார். அவர் மொத்தம் 10 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார். அடுத்த ஆண்டு நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யும் பட்சத்தில் மொராஜி தேசாய் உடன் அவரும் முதலிடத்தை பகிர்ந்து கொள்வார்.

இந்நிலையில் தான் நம் நாட்டில் எப்போது பட்ஜெட் தாக்கல் நடைமுறைக்கு வந்தது. சுதந்திரத்துக்கு முன்பு பட்ஜெட்டை தாக்கல் செய்தது யார்? சுதந்திர இந்தியாவில் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது யார்? பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நேரம், நாள் மாற்றம் குறித்த 10 சுவாரசிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கோவையை சேர்ந்தவர் முதல் பட்ஜெட்

* சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் என்பது 1947 ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற சில மாதங்களில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் ஆர்கே சண்முகம் செட்டி. இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர். தந்தை பெயர் கந்தசாமி செட்டியார். தாய் பெயர் ஸ்ரீரங்கம்மாள். செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் தான் ஆர்கே சண்முகம் செட்டி.

இவர் கொச்சி திவானாக 1931 முதல்1945 வரை பணியாற்றினார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மகாத்மா காந்தியின் விருப்பப்படி முதல் நிதிஅமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆங்கிலேயர்களிடம் கீழ் இருந்த நம் நாட்டின் நிதி நிலைமை மோசமாக இருந்த நிலையில் அதனை சீர்தூக்கும் முதன்மை பொறுப்பு அவரிடம் வழங்கப்பட்டது. பொருளாதார நிபுணராக இருந்த இவர் சிறந்த பேச்சாளராகவும் வலம் வந்தவர். அதுமட்டுமின்றி நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகராகவும் இவர் தான் பொறுப்பேற்றார்.

ஜேம்ஸ் வில்சன்

* ஆர்கே சண்முகம் செட்டிக்கு முன்பாக நம் நாட்டில் 1890ம் ஆண்டு ஏப்ரல் 7 ம் தேதி ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி சார்பில் இந்த பட்ஜெட்டை ஸ்காட்லாந்து பொருளாதார நிபுணரும், அரசியல்வாதியுமான ஜேம்ஸ் வில்சன் தாக்கல் செய்தார். அது வெளிநாட்டவர். ஆனால் சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் என்பது கோவையின் சண்முகம் செட்டி தாக்கல் செய்தது தான்.

* 1999ம் ஆண்டு வரை மத்திய பட்ஜெட் என்பது பிப்ரவரி மாத கடைசி வேலை நாளில் மாலை 5 மணிக்கு தாக்கல் செய்யப்படும். இந்த நடைமுறையை மாற்றியவர் முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா. அவர் பிப்ரவரி மாத கடைசி வேலை நாளில் காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறையை கொண்டு வந்தார்.

92 ஆண்டு நடைமுறை மாற்றம்

* பொதுவாக மத்திய பட்ஜெட் என்பது பிப்ரவரி மாத இறுதியில் தான் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இந்த 92 ஆண்டு கால நடைமுறையை 2017 ல் நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி மாற்றினார். அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

* கடந்த 2016 வரை மத்திய அரசு பொது பட்ஜெட், ரயில்வே பட்ஜெட் என்று 2 பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இந்த நடைமுறை என்பது கடந்த 2017 ம் ஆண்டு நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மாற்றினார். ரயில்வேக்கான தனி பட்ஜெட் நீக்கப்பட்டு பொதுபட்ஜெட்டுடன் சேர்க்கப்பட்டது.

முதல் பெண் நிதி அமைச்சர்

* மத்திய பட்ஜெட்டை முதல் முறையாக தாக்கல் செய்த பெண் யாரென்றால் அது மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தான். 1970-71ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இந்திரா காந்தி முதல் முறையாக தாக்கல் செய்தார். அதன்பிறகு 2019ல் மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன்மூலம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த 2வது பெண் நிர்மலா சீதாராமன் ஆவார்.

மன்மோகன் சிங் ரெக்கார்ட்

* அதிக வார்த்தைகளில் பட்ஜெட் உரையை நிகழ்த்தியவர் என்ற பெருமை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வசம் உள்ளது. கடந்த 1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ராவ் அரசு சார்பில் அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் மொத்தம் 18,650 வார்த்தைகள் இடம்பெற்றிருந்தது. இதற்கு அடுத்தப்படியாக 2018 ல் அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் 18,604 வார்த்தைகள் இருந்தது.

நிர்மலா சீதாராமன் சாதனை

* பட்ஜெட் உரையை அதிக நேரம் வாசித்த தலைவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக நிர்மலா சீதாராமன் உள்ளார். இவர் 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையை 2 மணிநேரம் 42 நிமிடங்கள் வாசித்தார்.

* பிரதமராக இருந்து கொண்டே 3 பேர் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். இந்த லிஸ்ட்டில் மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு, அவரது மகள் இந்திரா காந்தி, அவரது மகன் ராஜீவ் காந்தி உள்ளிட்டோர் உள்ளனர்.

பட்ஜெட் வார்த்தையின் பின்ணனி

* பட்ஜெட் (Budget) என்ற சொல் பிரெஞ்சு வார்த்தையில் இருந்து வந்தது. பிரெஞ்சில் Bougette என்ற வார்த்தை தான் பட்ஜெட்டாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிரெஞ்சில் bougette என்பதற்கு தோல் பை என்று பொருள். பட்ஜெட் ஆவணங்களை கொண்டு செல்லப்படும் தோல்பையை இது குறிக்கும்.

* பட்ஜெட் தாக்கலின்போது சூட்கேஸ் அல்லது தோல் பையை எடுத்து செல்லும் நடைமுறையை பிரிட்டன் தான் முதலில் அமல்படுத்தியது. அதனை நம் நாடும் ஏற்று கொண்டு இன்று வரை அதனை கடைப்பிடித்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+