பட்ஜெட் கூட்டத்தொடர்.. பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இப்போது தொடங்கி உள்ளது. ஒரு பக்கம் கூட்டணிக் கட்சிகள் தங்கள் மாநிலங்களுக்குச் சிறப்பு அந்தஸ்தைக் கோரும் நிலையில், மறுபுறம் எதிர்க்கட்சிகளும் நீட் விவகாரம் தொடங்கி பல்வேறு விஷயங்களை இந்த கூட்டத் தொடரில் எழுப்பத் திட்டமிட்டுள்ளன. மத்திய பட்ஜெட் நாளை தாக்கலாக உள்ள நிலையில், இன்றைய தினம் அவர் லோக்சபாவில் பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தார்
இந்தாண்டு லோக்சபா தேர்தல் நடந்ததால் கடந்த பிப். மாதம் 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டையே தாக்கல் செய்தார். தேர்தலில் என்டிஏ அரசு அமைந்துள்ள நிலையில், நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.

மறுபுறம் எதிர்க்கட்சிகள் நீட் தொடங்கி பல்வேறு விவகாரங்களை எழுப்பத் திட்டமிட்டுள்ளன. இதற்கிடையே இந்த பரபரப்பான சூழலில் நாடளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இப்போது தொடங்கியுள்ளது.
பாஜக: ஒரு பக்கம் பாஜக கூட்டணிக் கட்சிகளான நிதிஷ்குமாரின் ஜேடியு பீகார் மாநிலத்திற்கும் சந்திரபாபு நாயுடு ஆந்திராவுக்கும் சிறப்பு அந்தஸ்து கோருகிறார். இது ஒரு பக்கம் என்றால் எதிர்க்கட்சிகளும் நீட் விவகாரம் தொடங்கி பல்வேறு விஷயங்களை எழுப்பத் திட்டமிட்டுள்ளன. நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிலையில், ஆகஸ்ட் 12ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கிறது. இதற்கிடையே இப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் பொருளாதார ஆய்வறிக்கையை இப்போது தாக்கல் செய்தார்.
பட்ஜெட்: மொத்தம் மூன்று வாரங்கள் இந்த அமர்வு நடக்கிறது. இதில் தொடர்ந்து ஏழாவது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
முன்னதாக நேற்று ஜூலை 21ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், நீட்-யுஜி 'ஊழல்', கன்வார் யாத்திரை விவகாரம், ஜம்மு- காஷ்மீர் உள்நாட்டுப் பாதுகாப்பு நிலைமை போன்ற பிரச்சினைகள் குறித்து காங்கிரஸ் வலியுறுத்தியது. மேலும், மணிப்பூர் விவகாரம் குறித்தும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், மக்களவைத் துணைத் தலைவர் கவுரவ் கோகோய் காங்கிரஸ் சார்பில் பல்வேறு விவகாரங்களை முன்வைத்ததாகக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "நீட்/நெட் மோசடிகள், யுபிஎஸ்சி சர்ச்சைகள், மோசமடைந்து வரும் ரயில்வே வசதிகள், மற்றும் அக்னிவீர் தொடர்பான சிக்கல்கள் குறித்து விவாதிக்க கோகோய் அழைப்பு விடுத்தார்" என்று கூறினார். மேலும், மத்திய-மாநில உறவுகள் மற்றும் பொருளாதாரம் தொடர்பான பிரச்சினைகளையும் காங்கிரஸ் எழுப்பத் திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications