டெல்லியில் 11 பேர் கூண்டோடு தற்கொலை செய்தது ஞாபகம் இருக்கா.. அந்த வீடு இப்ப எப்படி இருக்கு தெரியுமா?
டெல்லி: டெல்லியில் 11 பேர் கூண்டோடு தற்கொலை செய்து கொண்ட வீடு தற்போது ரத்தப் பரிசோதனை ஆய்வகமாக மாறிவிட்டது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி தலைநகர் டெல்லியின் புராரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 10 பேர் தூக்கில் தொங்கிய நிலையிலும் மூதாட்டி ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்த நிலையிலும் கிடந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவர்கள் அனைவரும் சொர்க்கத்தை அடைய தங்கள் உயிரை மாய்த்து கொண்டனர் என்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. யாரோ சாமியார் சொன்னதை கேட்டு இவர்கள் தற்கொலை செய்து கொண்டனரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.

லேப் டெக்னீஷியன்
இவர்களது பிரேத பரிசோதனை முடிவுகளும் இவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவே தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த வீடு தற்போது ரத்தம், சிறுநீர் உள்ளிட்டவற்றை பரிசோதனை செய்யும் கூடமாக மாறியது.

பாலை தயிராக்க முயற்சி
இந்த 11 பேரில் ஒருவரின் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த குடும்பத்தில் உள்ள ஒருவர் இறந்த தனது தந்தையின் ஆவியுடன் அடிக்கடி பேசுவார் என கூறப்பட்டது. இறக்கும் நோக்கத்தில் இருந்த இவர்கள் பாலை தயிராக்குவதற்காக உரைவிட்டிருந்தது எப்படி என்ற கேள்விகள் எழுந்தன.

அதிர்ச்சி
அது பூஜை அறையிலும் ஏதோ பூஜை செய்ததற்கான அறிகுறிகள் இருந்தன. எனவே இந்த வீட்டில் ஏதோ அமானுஷ்யம் இருக்கும் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கும் நிலையில் அந்த வீடு பரிசோதனை கூடமாக மாறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
|
நோயாளிகள்
இதுகுறித்து பரிசோதனை கூடத்தின் உரிமையாளர் டாக்டர் மோகன் சிங் கூறுகையில் எனக்கு மூடநம்பிக்கைகளில் நம்பிக்கை இல்லை. இதையெல்லாம் நான் நம்பினால் இங்கு வந்தே இருக்க மாட்டேன். இந்த வீட்டில் வந்து ரத்த பரிசோதனை செய்து கொள்ள எனது நோயாளிகளுக்கும் எந்தவித பிரச்சினையும் இல்லை.

மூடநம்பிக்கைவாதி
முக்கிய சாலைக்கு அருகே இந்த வீடு உள்ளதால் இங்கு பரிசோதனை கூடம் நடத்துவது மிகவும் வசதியாக இருக்கிறது. நான் மூடநம்பிக்கைவாதி அல்ல என்றார். எனினும் அந்த வீட்டில் யாகங்கள், பூஜைகள் செய்யப்பட்டன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications