13 மாநிலங்களில் 3 லோக்சபா தொகுதி, 29 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!
டெல்லி: 13 மாநிலங்களில் 3 லோக்சபா தொகுதிகள் மற்றும் 29 சட்டசபை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இன்னும் ஒரு மணிநேரத்தில் லீடிங் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் 13 மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்கள் மரணங்கள், கட்சி தாவல்கள், ராஜினாமா ஆகிய காரணங்களால் 29 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 30-ந் தேதி இடைத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அதேபோல் 3 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தல்களில் மொத்தம் 50% முதல் 73% வரையிலான வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இன்னும் ஒரு மணிநேரத்தில் யார் முன்னிலை என்கிற விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹிமாச்சல் நிலவரம்
ஹிமாச்சல பிரதேசத்தில் மாண்டி தொகுதி எம்.பி.யாக இருந்த ராம்ஸ்வரூப் சர்மா, மத்திய பிரதேசத்தில் காண்ட்வா எம்.பி.யாக இருந்த நந்த்குமார் சிங் சவுகான், தாத்ரா - நாகர் ஹவேலி தொகுதி எம்.பி.யாக இருந்த மோகன் தேல்கர் ஆகியோர் மரணமடைந்ததால் 3 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெற்றது. மேலும் இடைத்தேர்தல் நடைபெற்ற 29 சட்டசபை தொகுதிகளில் 15 இடங்கள் பாஜகவிடம் இருந்தன; 9 காங்கிரஸ் வசம் இருந்தன; மாநில கட்சிகள் 5 இடங்களில் வென்றிருந்தன.

தெலுங்கானாவில் கவுரவப் போர்
தெலுங்கானாவில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சியில் மூத்த அமைச்சராக இருந்தவர் ஈடலா ராஜேந்தர். நில அபகரிப்பு விவகாரத்தில் அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இதையடுத்து ஈடலா ராஜேந்தர் ஹுசூராபாத் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். ஹுசூராபாத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக ஈடலா ராஜேந்தர் போட்டியிட்டுள்ளார். இதனால் முதல்வர் சந்திரசேகர ராவுக்கு இது கவுர பிரச்சனையான தேர்தலாக பார்க்கப்படுகிறது.

சவுதாலாக்களுக்கு சோதனை
ஹரியானாவில் எல்லனாபாத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக இந்திய தேசிய லோக் தளத்தின் தலைவர் அபய் சவுதாலா எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இவர், ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மகன். எல்லனாபாத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பவன் பெனிவால், பாஜக-ஜேபி கூட்டணி வேட்பாளர் கோபிந்த் காந்தா ஆகியோர் களத்தில் உள்ளனர். 2010 இடைத் தேர்தலில் அபய் சவுதாலா இத்தொகுதியில் வென்றார். 2014, 2019 தேர்தல்களிலும் அபய் சவுதாலா இத்தொகுதியை தமது கோட்டையாக வைத்திருந்தார். ஆகையால் அபய் சவுதாலாவுக்கு இன்றைய தேர்தல் முடிவு முக்கியமானதாகும்.

திரிணாமுலுக்கு சவால்
மேற்கு வங்கத்தில் தின்ஹாட்டா தொகுதியில் வென்ற பாஜகவின் நிசித் பிரமானிக், மத்திய அமைச்சரானதால் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தொகுதியை மீண்டும் கைப்பற்றுவதில் திரிணாமுல் காங்கிரஸ் மும்முரமாக உள்ளது. இத்தொகுதியில் திரிணாமுல் வேட்பாளராக போட்டியிடும் உதயண் குஹா, 2 முறை இதே தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர். சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட பாஜக எம்.பி. ஜகன்னநாத் சர்கார் சாந்திபூர் தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால் எம்.பி. பதவியை தக்க வைத்துக் கொண்டு எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் நடைபெற்றது. கார்தா தொகுதி திரிணாமுல் எம்.எல்.ஏ.வாக இருந்த காஜல் சின்ஹா கொரோனாவால் மரணம் அடைந்தார். ஆகையால் கார்தா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரும் அமைச்சருமான சோபன்தேவ் பட்டாச்சார்யா போட்டியிடுகிறார். பவானிப்பூர் தொகுதியில் மமதா பானர்ஜி போட்டியிடுவதற்காக அத்தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தவர் சோபன்தேவ் பட்டாச்சார்யா என்பதால் இத்தொகுதி தேர்தல் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

வெல்லும் நெருக்கடியில் கெலாட்
ராஜஸ்தானில் வல்லப்நகர் தொகுதி காங். எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கஜேந்திர சிங். அவரது மரணத்தால் இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் வேட்பாளராக கஜேந்திர சிங் மனைவி பிரீத்தி சக்தாவத் போட்டியிட்டுள்ளார். பாஜக வேட்பாளராக ஹிம்மத்சிங் ஜாலா போட்டியிட்டார். தாரிவாத் தொகுதியில் பாஜக எம்.எல்.ஏ. கவுதம் லால் மீனா காலமானதால் இடைத் தேர்தல் நடைபெற்றது. பாஜகவின் கேத்சிங் மீனா, காங்கிரஸின் நாக்ராஜ் மீனா போட்டியிட்டுள்ளனர். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி உள்ளார். ஆகையால் இந்த 2 தொகுதிகளிலும் வென்று செல்வாக்கை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் அசோக் கெலாட் உள்ளார்.

பசவராஜ் பொம்மைக்கு முதல் டெஸ்ட்
கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை முதல்வரான பின்னர் நடைபெறும் முதல் இடைத்தேர்தல் இது. மொத்தம் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. மதச்சார்பற்ற ஜனதா தளம் ஜேடிஎஸ் எம்.எல்.ஏ. எம்.சி. மனகுலி காலமானதால் சிந்த்கி, பாஜகவின் உதாசி காலமானதால் ஹங்கல் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. சிந்த்கி தொகுதியில் மனகுலி மகன் அசோக் மனகுலியை வேட்பாளராக்கியது காங். ஜேடிஎஸ் 33 வயதாக நியாஸ் ஷகீல் அகமதுவை நிறுத்தியது. ஹங்கலில் காங். கட்சி முன்னாள் எம்.எல்.சி. ஶ்ரீனிவாஸ் மானேவை நிறுத்தியது. இந்த 2 தொகுதிகளிலும் வெல்வதுதான் பசவராஜ் பொம்மையின் செல்வாக்கை வெளிப்படுத்துவதாக இருக்கும்.

வடகிழக்கில் 9 தொகுதிகள்
அஸ்ஸாமில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 3 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சிகள் 2 இடங்களிலும் போட்டியிட்டன. 5 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களை களமிறக்கியது. வடகிழக்கு மாநிலங்களில் மொத்தம் 9 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications