புதைக்கப்பட்ட ரூ.2 லட்சம் கோடி கணக்கு.. வெளிநாட்டு கடனை குறைத்து காட்டிய மத்திய அரசு! சிஏஜி பகீர்
டெல்லி: மத்திய அரசு 2021-22 நிதியாண்டில் தனது வெளிநாட்டு கடனை ரூ.2 லட்சம் கோடி வரை குறைத்து மதிப்பிட்டு உள்ளதாக இந்திய கணக்கு தணிக்கை மற்றும் கண்காணிப்பு அலுவலகமான சிஏஜி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
2021 - 22 நிதியாண்டிற்கான அறிக்கையை ஆகஸ்ட் மாதத்தில் சிஏஜி வெளியிட்டது. அதில் இடம்பெற்ற பல்வேறு விவரங்களை சுட்டிக்காட்டி மத்திய அரசை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. இந்த நிலையில் சிஏஜி அறிக்கையில், மத்திய முக்கிய தகவல்களை கணக்குகளின் முக்கிய பகுதியில் தெரிவிக்காமல் அடிக்குறிப்புகளில் மறைக்கும் போக்கை கையாண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தகவல்களில் சில மிகவும் முக்கியமானவை, என்றும் அவற்றை அதிக முக்கியத்துவம் கொடுத்து தெரிவித்து இருக்க வேண்டும் எனவும் சிஏஜி கூறியுள்ளது.
"அடிக்குறிப்புகளின் மூலம் முக்கிய தகவல்களை சித்தரிப்பது" என்ற தலைப்பில் உள்ள ஒரு சிஏஜி தெரிவித்து உள்ளதாவது, 2021-22 ஆண்டிற்கான அரசின் கணக்குகளின் முக்கிய பகுதி, மத்திய அரசின் வெளிநாட்டு கடன் ரூ.4.39 லட்சம் கோடி என்று வரலாற்று பரிமாற்ற விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு காட்டியுள்ளதாக சிஏஜி கண்டறிந்துள்ளது.
ஆனாலும், 2022 ஆம் ஆண்டு மார்ச் 3 காலகட்டத்திற்கான பரிமாற்று விகிதத்தில் இந்த கடன் உண்மையில் ரூ.6.58 லட்சம் கோடியாக இருக்கும் என்று ஒரு அடிக்குறிப்பு தெரிவிப்பதாக கூறும் சிஏஜி இது ரூ.2.19 லட்சம் கோடி அதிகமாக இருக்கும் என குறிப்பிட்டு உள்ளது.
இது நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை (FRBM) சட்டம், 2003 இன் கீழ் சட்ட விதிகளை மீறும் செயலாக பார்க்கப்படுகிறது. முறையான, நிலையான மற்றும் வெளிப்படையான நிதி கொள்கையின் நலன்களுக்காக அரசு கடைப்பிடிக்க வேண்டிய விதிகளை இந்த சட்டம் வகுத்து உள்ளது.
வெளிநாட்டு கடனின் மதிப்பை அடிக்குறிப்பு மூலம் மட்டுமே தெரிவிப்பது கணக்குகளின் வெளிப்படைமையை பாதித்துள்ளதுடன், சட்டவிதிகளை மீறும் செயல் என சிஏஜி குற்றம்சாட்டி உள்ளது. இதில் மத்திய அரசு கடனின் வரையறையில் தற்போதைய பரிமாற்று விகிதங்களில் மதிப்பிடப்பட்ட வெளிநாட்டு கடன் அடங்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல் மத்திய அரசு அடிக்குறிப்புகளில் முக்கிய தகவல்களை சேர்க்காததையும் சிஏஜி கண்டறிந்துள்ளது. மத்திய அரசின் கணக்குகள் அறிக்கையின்படி, 2022 மார்ச் 31 நிலவரப்படி, 'சிறு சேமிப்புகள் மற்றும் வருங்கால வைப்பு நிதிகள்' என்ற கணக்கீட்டுத் தலைப்பின் கீழ் மத்திய அரசின் மொத்த கடன்கள் ரூ.6,01,445.58 கோடியாகும்.
ஆனாலும், இந்த கணக்கீட்டுத் தலைப்பின் கீழ் அரசின் "பிற கடன்கள்" மற்றும் அதன் சில தொடர்புடைய முதலீடுகள் பற்றிய தகவல்கள் அடிக்குறிப்புகளின் வழியாக மட்டுமே தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ரூ.6,23,006.29 கோடி சிறு சேமிப்புக் கடன்கள் அடிக்குறிப்பு மூலம் மட்டுமே காட்டப்பட்டுள்ளது.
சிஏஜி, முந்தைய நிதியாண்டிற்கான அறிக்கையிலும் அடிக்குறிப்புகளின் தவறான பயன்பாடு குறித்து எழுப்பியிருந்தது. இதுபோன்ற அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைந்த வடிவத்தில் தெரிவிக்க ஒரு பிரிவை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு சிஏஜி அறிவுறுத்தி இருக்கிறது.

அதேபோல், மத்திய அரசு பொதுமக்களிடமிருந்து வசூலித்த வரிகளை முறையாக பயன்படுத்தப்படாமல், அவை தேக்கமடைந்து கிடப்பதாகவும், அவை வேறு நோக்கங்களுக்காக தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் சிஏஐ அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
குறிப்பிட்டு சொல்லப்போனால், 2021-22 ஆம் ஆண்டில் வசூலிக்கப்பட்ட சுகாதாரம் மற்றும் கல்வி வரியில், ஒரு பகுதி மத்திய மற்றும் உயர் கல்வி நிதி மற்றும் பிரதம மந்திரி ஸ்வஸ்தியா சுரக்சா நிதி (PMSSN) ஆகியவற்றுக்கு செல்ல வேண்டும். ஆனால், மத்திய அரசு அவற்றுக்கு நிதியளிக்கவில்லை என சிஏஜி கூறியுள்ளது.
இதேபோல், 2021 - 22 ஆம் ஆண்டில் மத்திய அரசு அனைவருக்கும் UAL எனப்படும் அணுகல் வரியின் கீழ் ரூ.10,376 கோடி வசூலித்தது. இந்த வரியை அனைவருக்கும் சேவை கடமை நிதிக்கு ஒதுக்கீடு செய்வதற்கு பயன்படுத்த வேண்டும். ஆனால், அதற்கு ரூ.8,300 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி மத்திய அரசு "பிற செலவுகள்" என்ற பொதுவான தலைப்பின் கீழ் பல்வேறு துறைகளில் தங்களின் செலவுகளில் பெரும்பகுதியை பட்டியலிட்டு இருக்கிறது. இது கணக்குகளில் வெளிப்படைமையை பாதிப்பதுடன், இதனால் நிர்வாகம் மற்றும் கண்காணிப்பு நோக்கங்களுக்காக செலவுகளை திட்டங்கள் வாரியாக அளவிட முடியாது என கணக்கு தணிக்கை வாரியம் கூறியுள்ளது
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications