தேர்தலை காரணம் காட்டி.. பைக்கில் பயணிக்க கூடாதுன்னு சொல்றதா? தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் குட்டு
டெல்லி: தேர்தலை காரணம் காட்டி, மேற்கு வங்கத்தில் யாரும் பைக்கில் பயணிக்க கூடாது என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் உத்தரவு போட்டிருந்தது. இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், இப்படியெல்லாம் தடை போட எந்த அதிகாரமும் இல்லை என தேர்தல் ஆணையத்தை கல்கத்தா உயர்நீதிமன்றம் தேர்தல் தலையில் கொட்டியிருக்கிறது.
மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. முதல் கட்டம் ஏப்.23ம் தேதி நிறைவடைந்திருந்தது. ஆனால், தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையம் போட்ட பைக் பயண தடை உத்தரவு, மக்களை ரொம்பவும் டென்ஷன் ஆக்கியிருந்தது.

கடந்த ஏப். 21ம் தேதி தேர்தல் ஆணையம் பிறப்பித்திருந்த உத்தரவில், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் சாலையில் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவ அவசரநிலை மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு விதிவிலக்கு உண்டு எனவும், ஏப்.23 வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் என்ற பெயரில் இப்படியான உத்தரவுகளை போட முடியாது என்று கல்கத்தா உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்குத் தேர்தல் ஆணையம் ஒட்டுமொத்தத் தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 324(1)-ன் படி தேர்தலை நடத்தும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இருந்தாலும், அது சட்டத்திற்கும் விதிகளுக்கும் உட்பட்டே இருக்க வேண்டும். எந்தச் சட்டத்தின் கீழ் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என்பதை அதிகாரிகள் நியாயப்படுத்தத் தவறிவிட்டதாக நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
பொதுவாக தேர்தல் காலங்களில், குறிப்பாக வாக்குப்பதிவு தினத்திற்கு சில நாட்களுக்கு முன்னதாக, மோட்டார் சைக்கிள் பேரணிகள் மூலம் வாக்காளர்கள் அச்சுறுத்தப்படலாம் அல்லது சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படலாம் எனக் கருதி இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
ஆனால், சாதாரண பொதுமக்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் 'ஒட்டுமொத்தத் தடை' விதிப்பது அவர்களின் தனிமனித சுதந்திரத்தைப் பாதிக்கும் என நீதிமன்றம் கருதுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications