தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற சம்பவம்.. போகட்டும் விடுங்க! வழக்கறிஞரை கண்டுக்காத நீதிமன்றம்
டெல்லி: "இந்த சம்பவம் தீவிரமான மற்றும் கடுமையான கிரிமினல் நீதிமன்ற அவமதிப்புதான். ஆனால், தலைமை நீதிபதியே மன்னிப்பு வழங்கிய பிறகு, நீதிமன்றம் ஏன் இந்த விஷயத்தை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டும்?" என்று, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசிய வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை கண்டுக்கொள்ளாமல் நீதிபதிகள் விட்டிருக்கின்றனர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது கடந்த அக்.6ம் தேதி வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், காலணி வீச முயன்றார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. விவகாரம் தொடர்பாக, ராகேஷ் கிஷோர் மீது கிரிமினல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜோய்மால்யா பாக்ஸி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணையில், "காலணி வீச முயன்ற ராகேஷ் கிஷோர், தான் செய்த சம்பவத்தை நியாயப்படுத்தி செய்தி ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார். எதிர்வரும் காலங்களில் இப்படி நடக்காமல் இருக்க வேண்டும் எனில், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது கடுமையான கிரிமினல் நீதிமன்ற அவமதிப்பாகும். இதை தட்டி கேட்பதற்கும், சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கொடுக்கவும் நீதிமன்றத்திற்கு உரிமை இருக்கிறது" என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இதை கேட்ட நீதிபதிகள், "தலைமை நீதிபதியே மன்னிப்பு வழங்கிய பிறகு, நீதிமன்றம் ஏன் இந்த விஷயத்தைத் தொடர வேண்டும்?" என்று கேள்வி எழுப்பி விஷயத்தை கண்டுக்கொள்ளாமல் தவிர்த்திருக்கின்றனர். இருப்பினும் நீதிபதியின் கருத்துக்களை ஏற்க மறுத்த மனுதாரர் தரப்பு, "தலைமை நீதிபதி மன்னித்து விட்டிருக்கிறார் எனில், அது அவருடைய பெருந்தன்மை. மட்டுமல்லாது அது அவருடைய தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம். தனிப்பட்ட விருப்பம் எப்படி மொத்த நீதிமன்ற அமைப்பையும் கட்டுப்படுத்தும்? இந்தச் சம்பவத்தை நாங்கள் சாதாரணமாக விட முடியாது. மக்கள் இதைப் பற்றி கேலி செய்கிறார்கள். ராகேஷ் கிஷோர் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால், இங்கிருந்தே அவரை சிறைக்கு அனுப்புங்கள்" என்று வலியுறுத்தியுள்ளது.
வாதங்களை கேட்ட அமர்வு, "ராகேஷ் கிஷோருக்கு எதுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்? அப்படி செய்வதன் மூலம் நெகட்டிவ் பேமஸ் ஆக வாய்ப்பு இருக்கிறது. ஒரு செயலை எதிர்கொண்ட நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்த பிறகு, மற்றொரு அமர்வு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க முடியுமா?. காலணி வீசுவது அல்லது கோஷமிடுவது பிரிவு 14 இன் கீழ் நீதிமன்றத்தின் முன்னிலையில் அவமதிப்புச் செயல்களாகும். இத்தகைய சந்தர்ப்பங்களில், அவமதிப்பு வழக்கை தொடங்குவதா வேண்டாமா என்பதை சம்பந்தப்பட்ட நீதிபதியே தீர்மானிக்க வேண்டும். தலைமை நீதிபதி தனது பெருந்தன்மையால் புறக்கணித்தார்" என்று அமர்வு கூறியது.
பின்னணி: அக்டோபர் 6 அன்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு அசாதாரண சம்பவம் நடந்தது. நீதிபதி BR கவாய் நீதிமன்றத்தில் அமர்ந்திருந்தபோது, ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் அவர் மீது காலணியை வீச முயன்றார். அப்போது நீதிமன்றத்தில் கிஷோர் கோஷமிட்டார் என்று சக வழக்கறிஞர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஆனால், பாதுகாப்புப் படையினர் அவரை உடனடியாக நீதிமன்ற அறையிலிருந்து வெளியேற்றினர். அவர் வெளியேற்றப்பட்டபோது - "சனாதன தர்மத்திற்கு அவமரியாதையை இந்தியா சகித்துக் கொள்ளாது" என்று கோஷமிட்டதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முதல்வர்கள் மு.க. ஸ்டாலின், பினராயி விஜயன், சித்தராமையா, ரேவந்த் ரெட்டி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இந்தச் செயலைக் கண்டித்து தலைமை நீதிபதிக்கு ஆதரவு தெரிவிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications