டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போலீஸ் வழக்கறிஞர்கள் இடையிலான சண்டை.. மறுசீராய்வு மனு தள்ளுபடி.. போலீஸ் தரப்பிற்கு பின்னடைவு!

போலீஸ் மற்றும் வழக்கறிஞர்களுக்கு இடையிலான சண்டை குறித்த வழக்கில் உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை டெல்லி ஹைகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    டெல்லியில் போராட்டம் நடத்திய போலீசார்

    டெல்லி: டெல்லியில் போலீஸ் மற்றும் வழக்கறிஞர்களுக்கு இடையிலான சண்டை குறித்த வழக்கில் உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை டெல்லி ஹைகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

    டெல்லி திஸ் ஹசாரி கோர்ட்டில் பார்க்கிங் பிரச்சனையில் போலீசாரை அங்கிருந்த வழக்கறிஞர்கள் தாக்கினார்கள். டெல்லியில் வழக்கறிஞர்களால் போலீசார் தாக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் நடந்தது.

    இதில் போலீசார் பலர் மோசமாக காயம் அடைந்தனர். இந்த பிரச்சனையில் 20 போலீஸ் வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டது. போலீஸ் கார் கொளுத்தப்பட்டது.

    மறுநாள்

    மறுநாள்

    இந்த பிரச்சனை பெரிதானதால் மறுநாளே ஞாயிற்றுக்கிழமை சிறப்பு விசாரணையை டெல்லி ஹைகோர்ட் நடத்தியது. டெல்லி ஹைகோர்ட் தலைமை நீதிபதி டி என் பாட்டீல், மற்றும் நீதிபதி ஹரிசங்கர் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். இந்த வழக்கில் டெல்லி ஹைகோர்ட் நீதி விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    என்ன உத்தரவு

    என்ன உத்தரவு

    அதேபோல் 2 போலீசார் இதனால் பணி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். மேலும் இந்த வழக்கில் வழக்கறிஞர்களை போலீசார் கைது செய்ய கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உடனே போலீசாருக்கு எதிரான உள்விசாரணையை கமிஷ்னர் தொடங்க வேண்டும். வழக்கறிஞர்கள் மீது இனியும் நடவடிக்கை எடுக்க கூடாது என்று நீதிபதிகள் கூறினார்கள்.

    என்ன போராட்டம்

    என்ன போராட்டம்

    இதற்கு எதிராக டெல்லியில் போலீசார் போராட்டம் செய்தனர். பல மாநில ஐபிஎஸ் அதிகாரிகள் போலீசார் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். நீதிமன்றத்திடம் இருந்து எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று போலீசார் கூறினார்கள். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட போலீசாரிடம், இந்த வழக்கில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று உள்துறை அமைச்சகம் கூறியது.

    மனுதாக்கல்

    மனுதாக்கல்

    இதனால்தான் நேற்று போராட்டம் கைவிடப்பட்டது. சொன்னபடியே இந்த வழக்கில் மறுசீராய்வு மனு போலீஸ் சார்பாக உள்துறை அமைச்சகம் மூலம் இன்று தாக்கல் செய்யப்பட்டது. காவல்துறைக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று உள்துறை அமைச்சகம் மனுவில் குறிப்பிட்டது. ஆனால் போலீஸ் மற்றும் வழக்கறிஞர்களுக்கு இடையிலான வழக்கில் உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை டெல்லி ஹைகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

    என்ன விசாரணையை

    என்ன விசாரணையை

    டெல்லி ஹைகோர்ட் தலைமை நீதிபதி டி என் பாட்டீல், மற்றும் நீதிபதி ஹரிசங்கர் அமர்வு இந்த வழக்கை விசாரித்தனர். அதில் ஞாயிற்றுக்கிழமை கொடுத்த தீர்ப்பில் மாற்றம் செய்ய முடியாது. அதேபோல் அந்த தீர்ப்பு குறித்த விளக்கத்தையும் அளிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறிவிட்டனர்.

    பெரும் பின்னடைவு

    பெரும் பின்னடைவு

    இதனால் போலீஸ் தரப்பிற்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் மீண்டும் போராட்டத்தில் குதிப்பார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

    English summary
    Can't stay the Sunday order says Delhi High Court in the review against Lawyers vs Police case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X