தீவிரவாதிகளின் புகலிடமாக உள்ளது.. கனடா நற்பெயரை காத்துக்கொள்ள வேண்டும்.. விளாசிய மத்திய அரசு
டெல்லி: பயங்கரவாதிகளின் புகலிடமாக கனடா மாறி வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. குற்றவாளிகளின் புகலிடமாக கனடா உள்ளது என்ற கெட்ட பெயர் ஏற்படாமல் கனடா அரசு செயல்பட வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி கூறியுள்ளார்.
கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கும் இந்தியாவிற்கும் இடையே அவ்வளவாக நல்லுறவு இல்லை. ஜி 20 மாநாட்டில் பங்கேற்க ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்த போதும் இந்தியா கொடுத்த ஹோட்டல் ரூமை ஏற்க மறுத்தார். அதேபோல், ஜஸ்டின் ட்ரூடோ விமானம் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு இந்தியாவிலேயே கூடுதல் நாட்கள் தங்க வேண்டியிருந்தது.

அப்போது, இந்தியா கொடுத்த விமானத்தை ஏற்க மறுத்தார். அது மட்டும் இன்றி ஜி 20 மாநாட்டில் பொதுவான சந்திப்புகளில் ட்ரூடோ ஓரம்கட்டப்பட்டது என்று சில மோதல்கள் ஏற்பட்டன. காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு கனடா கொடுத்த ஆதரவுதான் இந்தியாவில் இந்த நடவடிக்கைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கனடா - இந்தியா இடையேயான மோதல் அடுத்த கட்டத்தை எட்டி உள்ளது.
தற்போது கனடா நாட்டை சேர்ந்தவர்களுக்கான விசா சேவைகளை இந்தியா நிறுத்தி உள்ளது. கனடா நாட்டை சேர்ந்தவர்களுக்கு இந்தியா வருவதற்கான விசா வழங்க இடைக்கால தடை விதிக்கப்பட்டு உள்ளது. கனடா பிரதமர் ட்ரூடோவின் குற்றச்சாட்டிற்கு இந்தியா இதன் மூலம் சரமாரி பதிலடி கொடுத்துள்ளது. காலிஸ்தான் பயங்கரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் சுட்டுக்கொல்லப்பட்டப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருக்கலாம்.
இந்தியாவின் ஏஜென்சிகள் இதனை செய்திருக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இந்தியா மீதான இந்த குற்றச்சாட்டோடு நிற்காமல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் ஆதரவு திரட்ட ட்ரூடோ ஆரம்பித்தார். இது போன்ற விவகாரங்களினால் இந்தியா - கனடா உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி, கனடாவை கடுமையாக சாடினார். அரிந்தம் பக்ஷி கூறியதாவது:- இந்தியாவுக்கு எதிராக குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கனடா அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கனடாவில் இருந்து குற்றச் செயலில் ஈடுபடுவோர் பற்றி கனடா அரசுக்கு ஆதராமளித்தும் நடவடிக்கை இல்லை. ஹர்தீப் சிங் நிஜார் வழக்கில் எந்த தகவல்களையும் கனடா இந்தியாவுக்கு வழங்கவில்லை.
கனடா நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் காரணமாக விசா வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் புகலிடமாக கனடா மாறி வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. குற்றவாளிகளின் புகலிடமாக கனடா உள்ளது என்ற கெட்ட பெயர் ஏற்படாமல் கனடா அரசு செயல்பட வேண்டும். கனடாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அந்நாட்டின் பொறுப்பு ஆகும். அரசியல் காரணங்களுக்காக இந்தியா மீது கனடா குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது. ட்ரூடோவின் குற்றச்சாட்டுக்களை பிரதமர் மோடி நிராகரித்துள்ளார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications