அதிர்ந்தது தலைநகர் டெல்லி... முடங்கியது போக்குவரத்து.. பம்பர் டூ பம்பர் காத்திருக்கும் கார்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் நாடு தழுவிய போராட்டத்தால் டெல்லியில் குருகிராம் எல்லையில் அரை இன்ச் கூட இடைவெளி இல்லாமல் கார்கள் சாலையில் ஸ்தம்பித்து நிற்கின்றன.

விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைகள் சட்டம் 2020, வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் சட்டம் 2020 , அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 வேளாண் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு நஷ்டத்தை கொடுக்கும் என்றும் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

எனினும் மத்திய அரசு செவி சாய்க்காததால் அந்த 3 சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என கடந்த நவம்பர் மாதம் முதல் 9 மாதங்களாக விவசாயிகள் டெல்லியின் எல்லையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக முடிவு எட்டப்படவில்லை.

ஓராண்டு

ஓராண்டு

இந்த 3 வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டு இன்றுடன் ஓராண்டாகியுள்ளதை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. அதன் படி நாடு முழுவதும் 500 க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

4 மணிக்கு முடிவடைகிறது

4 மணிக்கு முடிவடைகிறது

இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மாலை 4 மணி வரை முடிவடைகிறது. டெல்லி- குருகிராம் எல்லையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள். தடுப்புகளை வைத்து டெல்லி எல்லையை போலீஸார் மூடியுள்ளனர். ஜெய்ப்பூரிலிருந்து டெல்லிக்கு வரும் இரு வழிகள் திறக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 48 இல் வாகன இயக்கமானது ஆமை வேகத்தில் உள்ளது.

நிரம்பிய கார்கள்

நிரம்பிய கார்கள்

டெல்லி- குருகிராம் எல்லையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சாலை முழுவதும் கார்கள் நிரம்பி வழிகின்றன. ஒரு ஆள் நுழையும் அளவுக்கு கூட இடமில்லாமல் பம்பர் டூ பம்பர் இடைவெளியில் கார்கள் ஸ்தம்பித்து நிற்கின்றன. இந்த சாலையில் நூற்றுக்கணக்கான கார்கள் தேங்கியுள்ளன.

மறியல்

மறியல்

விவசாயிகள் போராட்டம், மறியலால் குருகிராமில் போக்குவரத்து எப்படி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்களை போலீஸார் அவ்வப்போது அறிவித்தும் சமூகவலைதளங்களில் பதிவிட்டும் வருகிறார்கள். டெல்லிக்குள் விவசாயிகள் வருவதை தடுக்கும் விதமாக டெல்லியின் எல்லைகளான காசியாபாத், நொய்டா பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள்.

காசியாபாத்

காசியாபாத்

அது போல் டெல்லியில் காசியாபாத்தையும் நிஜாமுதீனையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. காசியாபாத்தில் எல்லையில் உள்ள உத்தரப்பிரதேச நுழைவு வாயில் மூடப்பட்டுள்ளது. டெல்லி- காசியாபாத் இடையில் உள்ள ஆனந்த் விகார், தில்ஷாத் கார்டன்- அப்சரா சினிமா மற்றும் துளசி நிகேதன் எல்லைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. டெல்லியில் ஆட்டோ ரிக்ஷாக்கள், டாக்ஸிகள் வழக்கம் போல் இயங்கும். கடைகளும் இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ளன. டெல்லிக்குள் நுழையும் வாகனங்கள் போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினரால் சோதனை செய்த பின்னர் உள்ளே அனுப்பப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+