Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொலீஜியம் பரிந்துரையில் தாமதம்.. மத்திய அரசுக்கு எதிரான மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொலீஜியம் பரிந்துரைக்கும் பெயர்களுக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு தாமதம் செய்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலீஜியம் நடைமுறை தொடர்பாக மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றத்திற்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. நீதிபதிகளை நீதிபதிகளே நியமனம் செய்யும் கொலீஜியம் நடைமுறைக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

Case filed against centre about delay in judges appointment by Collegium

இந்த நிலையில் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கொலீஜியம் பரிந்துரைக்கும் பெயர்களுக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு மிகவும் தாமதம் செய்து வருகிறது. இது குறித்து உச்சநீதிமன்றம் பல முறை மத்திய அரசுக்கு சுட்டிக் காட்டிய நிலையிலும் தொடர்ந்து இந்த தாமதம் இருந்து வருகிறது.

கொலீஜியத்தின் 14 பரிந்துரைகள் மத்திய அரசிடம் ஒப்புதலுக்காக நிலுவையில் இருப்பதாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அந்த பரிந்துரையில் 5 பெயர்கள், மறுமுறை பரிந்துரைக்கப்பட்ட பின்னரும் நீண்ட காலமாக நிலுவையில் வைக்கப்பட்டிருந்ததாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசை கண்டித்து உச்சநீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் ஒன்று பெங்களூர் வழக்கறிஞர் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் உச்சநீதிமன்றம் கடந்த 2021 ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பில் கொலீஜியம் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்ததை முறையாக பின்பற்றாத மத்திய சட்ட அமைச்சகத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரப்பட்டது.

அந்தத் தீர்ப்பில் கொலீஜியம் பரிந்துரைகள் மீது 3 முதல் 4 வாரங்களுக்குள் பரிசீலனை செய்து நீதிபதிகள் நியமனத்துக்கான ஒப்புதலை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. இந்த மனு மீது கடந்த 7ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது கொலீஜியம் பரிந்துரைகளில் குறிப்பிட்ட பெயர்களை மட்டுமே மத்திய அரசு தேர்வு செய்து ஒப்புதல் அளிப்பது கவலை அளிப்பதாக உள்ளது.

உயர்நீதிமன்றங்களுக்கு இடையே நீதிபதிகளை பணிஇடமாற்றம் செய்வதற்கான பரிந்துரையும் காலம் தாழ்த்தப்படுகிறது. இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அட்டர்னி ஜெனரல் உறுதியளித்திருந்தார் என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டு விசாரணையை நவம்பர் 20க்கு ஒத்தி வைத்தது. இந்த நிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று மீண்டும் வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+