கண்ட இடங்களில் தொட்டு துப்பாக்கி முனையில் பலாத்காரம்.. பாஜக முன்னாள் எம்எல்ஏ மீது மருமகள் புகார்
டெல்லி: டெல்லி பாஜக முன்னாள் எம்எல்ஏ மனோஜ் ஷோகீன் தனது மருமகளை துப்பாக்கி முனையில் மிரட்டி பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்தவர் மனோஜ் ஷோகீன். இவர் பாஜகவை சேர்ந்தவராவார். இவர் நாங்லோய் தொகுதியில் 2 முறை எம்எல்ஏவாக இருந்தார். இவர் மீது மருமகள், பலாத்கார புகாரை கொடுத்துள்ளார். இதன் பேரில் அவரது மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த புகாரில் அந்த பெண் கூறுகையில், கடந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி எனது கணவர், அவரது சகோதரர், ஒரு உறவினருடன் மீரா பாக்கில் இருந்த மாமனார் வீட்டுக்கு செல்வதற்காக கிளம்பினோம். ஆனால் மாமனார் வீட்டுக்கு செல்வதற்கு முன்னர் எனது கணவர் பாசிம் விகார் பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார்.

நண்பர்களுடன்
அந்த ஹோட்டலில் புத்தாண்டு கொண்டாடினோம். இதையடுத்து கொண்டாட்டம் முடிவடைந்த நிலையில் ஜனவரி 1-ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு மாமனார் வீட்டுக்கு வந்தோம். சிறிது நேரத்துக்கு பின்னர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள எனது கணவர் அவரது நண்பர்களுடன் சென்றுவிட்டார்.

கதவை தாழிட்டு அட்டூழியம்
இதையடுத்து நான் தனியறையில் தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போது 2 மணியளவில் எனது அறை கதவை மாமனார் தட்டினார். அப்போது அவர் என்னிடம் முக்கியமான விவகாரம் குறித்து பேச வேண்டும் என கூறினார். இதனால் கதவை திறந்தவுடன் என்னை தள்ளிவிட்டு கதவை தாழிட்டுவிட்டார்.

சகோதரன்
பின்னர் என்னை கண்ட இடங்களில் தொட்டார். அவர் குடிபோதையில் இருந்ததால் அவரை அவரது அறைக்கு செல்லும் படி கூறினேன். ஆனால் அவரோ என்னிடம் துப்பாக்கியை காண்பித்து தனது ஆசைக்கு இணங்கும்படி கூறி என்னை துன்புறுத்தினார். பின்னர் என்னையும் என் சகோதரனையும் கொன்று விடுவதாகவும் அவர் மிரட்டினார்.

துப்பாக்கி முனை
நான் சப்தம் எழுப்ப முயன்ற போது என்னை கன்னத்தில் அறைந்தார். பின்னர் துப்பாக்கி முனையில் என்னை பலாத்காரம் செய்தார். எனது திருமண வாழ்க்கை பாதிக்கக் கூடாது என்பதற்காகவும் என் குடும்பத்தாருக்கு எதுவும் நடக்கக் கூடாது என்பதற்காகவும் நான் புகார் ஏதும் தரவில்லை.

மாமனார்
ஆனால் தற்போது நான் பாதுகாப்பாக இருக்கிறேன். இதனால் தற்போது புகார் அளிக்கிறேன். என் மாமனார் மீது நடவடிக்கை எடுங்கள் என அந்த மனுவில் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications