'தாய் மதம் திரும்புதல்' வார்த்தையை விட்ட ஆர்எஸ்எஸ் தலைவர்! வரிந்து கட்டும் கத்தோலிக்க பிஷப் அமைப்பு
டெல்லி: கர் வப்சி எனப்படும் தாய் மதம் திரும்புதல் இல்லையென்றால் ஆதிவாசிகள் தேசத்திற்கு விரோதிகளாக ஆகியிருப்பார்கள் என்று பிரணாப் முகர்ஜி கூறியதாக ஆர்.எஸ். எஸ் தலைவர் மோகன் பகவத் கூறிய கருத்துக்கு கத்தோலிக்க பிஷப் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் அண்மையில் பேசிய கருத்துக்கள் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ராமர் கோயில் குடமுழுக்கு நடந்த நாள்தான் நாட்டிற்கு உண்மையான சுதந்திரம் கிடைத்த நாள் என்று மோகன் பகவத் கூறினார். இவரது கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி, மோகன் பகவத்தை கடுமையாக விமர்சித்தார். மோகன் பகவத்தின் பேச்சு ஒவ்வொரு இந்தியரையும் அவமதிக்கும் செயல் எனவும் பொதுவெளியில் இப்படி பேச அவருக்கு எப்படி துணிச்சல் வந்தது எனவும் பிற நாடாக இருந்தால் மோகன் பகவத் கைது செய்யப்பட்டு இருப்பார் எனவும் பேசியிருந்தார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோரும் மோகன் பகவத் கருத்தை விமர்சித்து இருந்தனர்.

மோகன் பகவத்தின் கருத்து அரசியல் ரீதியாக கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கர் வாப்சி எனப்படும் வேறு மதத்திற்கு சென்றவர்கள் மீண்டும் தாய் மதம் திரும்புதல் நிகழ்வு இல்லையென்றால் ஆதிவாசிகள் தேச விரோதிகளாக ஆகியிருப்பார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியதாக மோகன் பகவத் கூறிய கருத்தும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
மோகன் பகவத் கூறுகையில், பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக இருந்த போது, கர் வாப்சி திட்டத்தை பாராட்டினார். அவர் என்னிடம் கூறுகையில், மதமாற்றம் செய்யும் பணியை இந்து அமைப்புகள் செய்யவில்லை என்றால் ஆதிவாசிகள் தேச விரோதிகளாக ஆகியிருப்பார்கள் என கூறினார்" என்று பேசியிருந்தார்.
மோகன் பகவத்தின் இந்த கருத்தை கடுமையாக கண்டித்துள்ள கத்தோலிக்க கூட்டமைப்பு மோகன் பகவத் கருத்து அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளது. இது தொடர்பாக கத்தோலிக்க பிஷப் கூட்டமைப்பு கூறியிருப்பதாவது:- மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடனான உரையாடல் என அவர் மறைந்த பிறகு வெளியாகும் இட்டுக்கட்டப்பட்ட கருத்துக்கள் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் இருப்பதோடு, சுயநலத்துடன் வெளியாகும் கருத்துக்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையை எழுப்பும் விதமாக உள்ளது" என்று தெரிவித்துள்ளது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் இருந்த பழங்குடியினரை தங்கள் விரும்பியதை சுதந்திரத்துடன் செய்ய விடாமல் தடுப்பதுதான் உண்மையான தேச விரோத செயல் இல்லையா? என்று கேள்வி எழுப்பியிருந்தது. மேலும் பிரணாப் முகர்ஜி உயிருடன் இருந்த போது இதை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. ஏற்கனவே சுதந்திரம் தொடர்பான மோகன் பகவத்தின் கருத்து அரசியல் ரீதியாக கடும் விமர்சனங்களை எழுப்பி வரும் நிலையில், தற்போது கர் வாப்சி தொடர்பாக மோகன் பகவத் பேசியிருப்பதும் கடும் விவாதப்பொருளாகியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications