சித்தராமையா 'சேட்டை'... காவிரி பிரச்சனையில் தமிழ்நாடு அரசு பொய் சொல்லுதாம்.. திசை திருப்புதாம்!
டெல்லி: காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழ்நாடு அரசு தவறான தகவல்களை தெரிவித்து திசை திருப்புவதாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.
காவிரி பிரச்சனை தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துக்கு சித்தராமையா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசு கடந்த 92 நாட்களில் 99.776 டிஎம்சி நீரை பயன்படுத்தி இருக்கிறது. ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் செப்டம்பர் 11-ந் தேதி வரை தமிழ்நாடு 99.776 டிஎம்சி நீரை பயன்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசு மொத்தம் 5.60 லட்சம் ஏக்கர் பாசனப்பகுதி எனக் குறிப்பிட்டுள்ளது. இது தவறான தகவல். இத்தகவலில் உண்மை எதுவும் இல்லை. வடகிழக்கு பருவமழையால் கர்நாடகா எந்த வித பலனையும் பெறவே இல்லை. கர்நாடகாவுக்கு சாதாரண மழைப்பொழிவு மூலமே நீர் கிடைத்துள்ளது.
காவிரி ஒழுங்காற்று ஆணையமானது தமிழ்நாட்டுக்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரை திறந்துவிட பரிந்துரைத்துள்ளது. இது நடைமுறையில் சாத்தியம் அற்றது. தமிழ்நாட்டுக்கு தேவையான நீரை தற்போதைய நிலையில் திறந்துவிட முடியாது. இவ்வாறு மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துக்கு சித்தராமையா கடிதம் அனுப்பி உள்ளார்.

முன்னதாக கர்நாடகாவில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை சித்தராமையா கூட்டினார். காவிரி பிரச்சனைக்காக கூட்டப்பட்ட இந்தக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர்கள் பாஜகவின் பசவராஜ் பொம்மை, ஜேடிஎஸ்-ன் குமாரசாமி பங்கேற்கவில்லை. இந்தக் கூட்டத்துக்குப் பின் தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிட முடியாது என முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக கூறினார்.
கர்நாடகா அனைத்து கட்சிக் கூட்டத்தில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார், அமைச்சர்கள் கிருஷ்ண பைரே கவுடா, ராமலிங்கரெட்டி, போசராஜூ, மது பங்காரப்பா, முனியப்பா, ஜமீர் அகமது கான், முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி, பாஜக எம்.பிக்கள் மோகன், பிரதாப் சிம்ஹா, சுயேட்ச எம்பி (மாண்டியா) நடிகை சுமலதா அம்பரீஷ், சுயேட்சை எம்.எல்.ஏ. தர்ஷன் புட்டண்ணய்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் இன்று டெல்லி செல்கிறார் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார். டெல்லியில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை நேரில் சந்தித்து காவிரி பிரச்சனையில் கர்நாடகா தரப்பு நியாயத்தை விளக்க இருக்கிறார். அத்துடன் முதல்வர் சித்தராமையா எழுதிய, தமிழ்நாட்டுக்கு எதிரான கடிதத்தையும் அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திடம் வழங்குகிறார் டிகே சிவகுமார்.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications