டெல்லியில் நாளை மறுநாள் நடைபெற இருந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூலை 6-க்கு ஒத்திவைப்பு!
டெல்லி: டெல்லியில் நாளை மறுநாள் நடைபெற இருந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஜூலை 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் டெல்லியில் ஜூன் 17-ல் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கர்நாடகா அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பாக விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது. காவிரி ஆணையம் என்பது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை செயல்படுத்த மட்டுமே அமைக்கப்பட்டது என்பது தமிழகத்தின் நிலைப்பாடு.

இதனையடுத்து காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம், ஜூன் 23-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருந்தார். அத்துடன் தமிழக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டசபை கட்சித் தலைவர்கள் குழு டெல்லி செல்லும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டெல்லியில் மத்திய அமைச்சர்களை தமிழக குழு நாளை சந்திக்க இருக்கிறது. இந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து டெல்லியில் நாளை மறுநாள் நடைபெற இருந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் ஜூலை 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications