நீட் வினாத்தாள் கசிவு.. ’மாஸ்டர் மைண்ட்” ஆக செயல்பட்ட புனே பெண் பேராசிரியை.. சுற்றி வளைத்த சிபிஐ
டெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் முக்கிய மூளையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள புனேவை சேர்ந்த தாவரவியல் பேராசிரியர் மணிஷா மந்தாரேவை சிபிஐ கைது செய்துள்ளது. தேசிய தேர்வு முகமைக்காக பல ஆண்டுகளாக கேள்வித்தாள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவர், மாணவர்களுக்கு ரகசியமாக வினாத்தாளை கசியவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்காக நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மருத்துவ படிப்புகளில் சேர முடியும் என்பதால் நாடு முழுவதும் பல லட்சக்கணக்கானவர்கள் இந்த தேர்வை எழுதுகிறார்கள். நடப்பு கல்வி ஆண்டிற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 3 ஆம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது கண்டறியப்பட்டதையடுத்து, நீட் தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மறு தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. மோசடியில் ஈடுபட்டதாக இதுவரை 7 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. நேற்று புனேவை சேர்ந்த வேதியியல் பேராசிரியரை கைது செய்தது. இந்த நிலையில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட பேராசிரியரை சிபிஐ கைது செய்துள்ளது.
புனேவை சேர்ந்த தாவரவியல் பேராசிரியரான மணிஷா மந்தாரே கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஐ விசாரணை நடத்திய நிலையில் அவரை கைது செய்துள்ளது. பயாலஜி வினாத்தாளை கசிய விட்டதில் இவர் மாஸ்டர் மைண்டாக செயல்பட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு மோசடியில் முக்கிய நபராக செயல்பட்ட பிவி குல்கர்னியிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் மந்தாரே கைது செய்யப்பட்டுள்ளார். புனேவில் உள்ள மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றி வந்த மந்தாரே, தேசிய தேர்வு முகமைக்காக கடந்த ஆறு ஆண்டுகளாக கேள்வித்தாள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
உயிரியியல் மற்றும் தாவரவியல் வினாத்தாளை முழுமையாக அணுகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இவர் புனேவில் நடைபெற்ற ரகசிய பயிற்சி வகுப்பில் சில குறிப்பிட்ட மாணவர்களுக்கு இந்த வினாத்தாளை கசியவிட்டதாக கூறப்படுகிறது.
லட்சக்கணக்கான ரூபாயை கட்டணமாக பெற்றுக்கொண்டு, கசிந்த கேள்விகளையும் அதற்கான விடைகளையும் மந்தாரேவே அவர்களுக்குச் சொல்லிக்கொடுத்ததாகவும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கான தேர்வர்களை மனிஷா வாக்மரே என்பவர் உதவியுடன் மந்தாரே திரட்டியதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. மனிஷா வாக்மரே மே 14-ஆம் தேதி சிபிஐயால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications