‛‛டார்க்நெட்டில் கசிந்த வினாத்தாள்’’.. யுஜிசி நெட் தேர்வு ரத்து ஏன்? பரபர தகவல்.. சிபிஐ எப்ஐஆர்
டெல்லி: கடந்த 18 ம் தேதி நடந்த யுஜிசி நெட் தேர்வு திடீரென்று ரத்து செய்வதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் சிபிஐ எப்ஐஆர் பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளது. இத்தகைய சூழலில் தான் தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் டார்க்நெட்டில் கசிந்ததும், அதனால் தான் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் தேசிய தேர்வு முகமை சார்பில் பல்வேறு நுழைவுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றனர். இந்த தேசிய தேர்வு முகமை சமீபகாலமாக அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இந்த ஆண்டு மே மாதம் 5ம் தேதி நடத்தப்பட்ட இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வில் முறைகேடு புகார் எழுந்துள்ளது.

இது விஸ்வரூபமான நிலையில் 1500க்கும் மேற்பட்டவர்களுக்கு மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக கூறியும், தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இத்தகைய சூழலில் தான் கடந்த 18 ம் தேதி நாடு முழுவதும் யுஜிசி நெட் (UGC NET Exam) நடந்தது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் துணை பேராசிரியர் பணி மற்றும் ஜுனியர் ரிசர்ஜ் பெல்லோஷிப் பெறுவதற்கான இந்த தேர்வையும் தேசிய தேர்வு முகமை தான் நடத்தியது. இத்தகைய சூழலில் தான் நேற்று முன்தினம் இந்த தேர்வு திடீரென்று ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக மத்திய கல்வி அமைச்கம், ‛‛தேசிய தேர்வு முகமையின் யுஜிசி நெட் தேர்வு நாடு முழுவதும் ஜுன் 18ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்தியன் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு சென்டர் அனுப்பிய தகவலை தொடர்ந்து தேர்வு செயல்முறையின் மிக உயர்ந்த வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்யும் நோக்கில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிக்கையில் தேர்வு ரத்துக்கான காரணம் என்பது வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை. டெக்னிக்கல் வார்த்தைகளுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் கசிந்து இருக்கலாம். இதனால் தேர்வு ரத்து செய்யப்பட்டு இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் தான் யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக பல மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. நேற்று லக்னோவில் ஏராளமானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக்கூறி அவர்கள் போராட்டம் செய்தனர்.
இந்நிலையில் தான் யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக பல மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. நேற்று லக்னோவில் ஏராளமானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக்கூறி அவர்கள் போராட்டம் செய்தனர்.
இந்நிலையில் தான் யுஜிசி நெட் 2024ம் ஆண்டுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பான பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் டார்க்நெட்டில் கசிந்துள்ளது. இதன்காரணமாக தான் அந்த தேர்வை மத்திய கல்வித்துறை அமைச்சகம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது டார்க்நெட் என்பது பிரத்யேகமான இணையமாகும். இதனை பயன்படுத்தி பல முறைகேடுகள் நடந்து வருகிறது. போதைப்பொருள் விற்பனை உள்பட பல குற்றச்செயல்கள் டார்க்நெட் வழியாக நடக்கிறது. இந்நிலையில் தான் டார்க்நெட்டில் வினாத்தாள் கசிந்துள்ளது.
இதனை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் நேற்று அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டதன் பின்னணி பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‛‛டார்க்நெட்டில் யுஜிசி நெட் தேர்வுக்கான வினாத்தாள் தேர்வுக்கு முன்பாகவே கசிந்துள்ளது. இந்த வினாத்தாளும், தேர்வு வினாத்தாளும் ஒன்றாக உள்ளது. இதனால் தேர்வை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். இந்த பிரச்சனைக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம். விரைவில் புதிய தேர்வு நடத்தப்படும்'' என்றார்.
இதற்கிடையே தான் டார்க்நெட்டில் யுஜிசி நெட் தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக சிபிஐ எப்ஐஆர் பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications