தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் எப்ஐஆர் பதிவு செய்தது சி.பி.ஐ.. யார் யார் குற்றவாளிகள் என பதிவு
தஞ்சை மாணவி வழக்கில் எப்ஐஆர் பதிந்தது சிபிஐ
டெல்லி: தஞ்சை பள்ளி மாணவியின் தற்கொலை விவகாரத்தில் சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது.. இதில் மாணவியின் மரணம் இயற்கைக்கு மாறானது என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேசமயத்தில் மாணவியின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகள் யார்? யார்? என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரியலூர் மாவட்டம் வடுகபாளையத்தை சேர்ந்த மாணவி, தஞ்சை மாவட்டம் திருக்காட்டுபள்ளியை அடுத்த மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2படித்து வந்தார்....
ஹாஸ்டலில் தங்கி படித்த அவர் கடந்தமாதம் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மதமாற்றம் செய்யக் கட்டாயப்படுத்தியதால்தான், மாணவி தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது...

தற்கொலை
இதுதொடர்பாக மாணவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விடுதி வார்டன் சகாய மேரியை போலீஸார் கைது செய்தனர்... மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழ்நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கியது.. மாணவியின் தற்கொலைக்கு கட்டாய மதமாற்றம்தான் காரணம் எனக்கூறி பாஜகவினரும் இந்து அமைப்பினரும் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையக்குழுவினரும் தஞ்சாவூருக்கு நேரடியாகவே வந்து விசாரணை மேற்கொண்டனர்.

தற்கொலை
இதனிடையே, தன்னுடைய மகள் தற்கொலை தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி மாணவியின் தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்... பிறகு, சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்... அவரது மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தார்...

சிபிஐ
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது... எனினும் சிபிஐ விசாரணையை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. பின்னர், மாணவி தற்கொலை வழக்கின் விசாரணை, சிபிஐக்கு உடனடியாக மாற்றப்பட்டது... இந்நிலையில் மாணவி தற்கொலை விவகாரத்தில் இன்றைய தினம் சிபிஐ தன்னுடைய எப்ஐஆர் எனப்படும் தன்னுடைய முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது... இதில், மாணவி மரணம் இயற்கைக்கு மாறான மரணம் என்ற 5 பிரிவுகளின் கீழ் பதிவு செய்து விசாரணையை வேகப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்பார்ப்பு
குறிப்பாக, குழந்தைகளை தற்கொலைக்கு தூண்டுதல், குற்றம் முயற்சி செய்தல், சிறார் நீதி சட்டத்தின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளிகள் யார் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.. இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ துவக்கி உள்ள நிலையில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகள் கூடி வருகின்றன.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications