எரிந்துபோன பிட் பேப்பர்..பார்கோடை வைத்து குற்றவாளிகளை தூக்கிய சிபிஐ! நீட் முறைகேடு வழக்கில் ட்விஸ்ட்
டெல்லி: நீட் தேர்வுத்தாள் கசிவு விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, எப்படி குற்றவாளிகள் குறித்து துப்பு துலக்கப்பட்டது என்பது குறித்து சிபிஐ தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பாதி எரிந்த போன வினாத்தாளில் கிடைத்த பார்கோட் எண்ணை வைத்து ஜார்க்கண்டில் உள்ள ஒரு பள்ளியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் இந்த மோசடியில் ஈடுபட்டதை கண்டறிந்ததாக சிபிஐ குறிப்பிட்டுள்ளது.
நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி எனப்படும் தேசிய தேர்வு முகமை எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை கடந்த மே மாதம் 5ஆம் தேதியன்று நடத்தியது.

நாடு முழுவதும் 557 நகரங்கள் மற்றும் 14 வெளிநாடுகளில் நீட் மே 5ஆம் தேதியான அன்று தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெறுகிறது.
சுமார் 24 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பத்த நிலையில் 23 லட்சம் பேர் வரை தேர்வில் கலந்து கொண்டனர். அந்த தேர்வில் பல மாநிலங்களில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியானது. அதில் 13,16,268 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது 56.41% சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும், இந்த தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட 0.2% சதவீதம் அதிகமாகும் என என்டிஏ கூறியிருந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு வெளியான முடிவுகளில், தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதனையடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏற்றது.
நீட் வினா தாள் வெளியானதோடு, மேலும் பல முறைகேடுகள் நடந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து பீகார், ஜார்க்கண்ட், குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சோதனை நடத்தி பலரை கைது செய்தது. இதைத்தொடர்ந்து சிபிஐயால் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 36ஆக உயர்ந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் நீட் தேர்வை ரத்து செய்ய போதிய தரவுகள் இல்லை எனக் கூறியது.
நீட் தேர்வுத்தாள் கசிவு விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, எப்படி குற்றவாளிகள் குறித்து துப்பு துலக்கப்பட்டது என்பது குறித்து சிபிஐ தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதில், நீட் தேர்வு வினாத்தாள் ஜார்கண்டின் ஹசாரிபாக்கில் உள்ள ஒயாசிஸ் பள்ளியில் இருந்து சட்டவிரோதமாக புகைப்படம் எடுக்கப்பட்டு பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்டு ஒரு சில மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் புகைப்படங்களாக அவை பல மாணவர்களுகு கொடுக்கபப்ட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவின் மூளையாக செயல்பட்டதாக கருதப்படும் பங்கஜ்குமார், ஓயாசிஸ் பள்ளியின் முதல்வர், துணை முதல்வர் மற்றும் மற்றொரு நபருடன் சேர்ந்து குறிப்பிட்ட அந்த பள்ளியில் வினாத்தாள்களை புகைப்படம் எடுத்துள்ளனர். வினாத்தாள்கள் வைக்கப்பட்ட அறைக்கு அருகே இருந்த மற்றொரு அறையில் பங்கஜ்குமார் பதுங்கி இருந்ததாகவும் பின்னர் வினாத்தாள் அறைக்குச் சென்று சீலை நவீன இயந்திரங்கள் மூலம் உடைத்து விட்டு வினாத்தாள்களை புகைப்படம் எடுத்துள்ளார்.
மேலும் லைட்டர் மூலம் மீண்டும் சீலை ஹீட் செய்து ஒட்ட வைத்துள்ளனர். அதற்குப் பிறகு அந்த வினாத் தாளை புகைப்படம் எடுத்து பலருக்கும் அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் அந்த பள்ளி தேர்வு மையம் இருந்த நிலையில், மாணவர்கள் பிரதி எடுக்கப்பட்ட நீட் தேர்வு வினாத் தாளை வைத்து படித்துள்ளனர். பின்னர் அதனை எரித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் போலீசாரால் கைப்பற்றப்பட்ட அந்த எரிந்த வினாத்தாளின் ஒரு பகுதியில் பார் கோடு இருந்துள்ளது அனைத்து வினாத்தாள்களிலும் தனித்தனியாக பார் கோடு இருக்கும் நிலையில் குறிப்பிட்ட மாணவி ஒருவர் வினாத்தாள் லேசாக எரிந்திருப்பது போல் இருப்பதாக புகார் அளித்துள்ளார். இதை அடுத்து அந்த பார் கோடு எண்ணை வைத்து அது எங்கு இருந்தது என தேடிய போது தான் ஓயாசிஸ் பள்ளியில் இருந்த வினாத்தாள் என்பது கண்டறியப்பட்டது. இதை வைத்தே பள்ளியின் முதல்வரும் துணை முதல்வரும் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளனர். அந்த வகையில் எரிந்து போன ஒரு துண்டு நீட் வினாத்தாளை வைத்து இந்த வழக்கின் குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications