90 மணிநேரங்கள்.. துருவி துருவி கேட்ட சிபிஐ அதிகாரிகள்.. 450 கேள்விகளுக்கு பதிலளித்தார் ப.சிதம்பரம்
Recommended Video
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரத்திடம் 90 மணி நேரங்களில் 450 கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தார்.
கடந்த 2007-ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்த போது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ 305 கோடி வெளிநாட்டு நிதியை பெற்றது. இதற்காக மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து ப.சிதம்பரம், கார்த்தி ஆகியோர் மீது சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த நிலையில் கடந்த 21-ஆம் தேதி அவர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கடந்த 15 நாட்களாக சிபிஐ காவலில் இருந்து வரும் அவருக்கு ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.

செப்டம்பர் 19 வரை
ஆனால் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அவரை நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் செப்டம்பர் 19-ஆம் தேதி வரை அடைக்கப்படுவார்.

குற்றப்பத்திரிகை
அவருக்கென தனி அறை, மேற்கத்திய கழிப்பறை, மருந்துகள், இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் மீது செப்டம்பர் 20-ஆம் தேதி சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

90 மணி நேரம்
15 நாட்கள் காவலில் இருந்த சிதம்பரத்திடம் 90 மணி நேரம் சிபிஐ போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் 450 கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

கேள்விகள்
அந்த கேள்விகளில் பெரும்பாலானவை வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு கழகம் மூலம் வெளிநாட்டு நிதியை அனுமதித்தது எப்படி என்ற கேள்விகள் ஆகும் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications