டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே நாளில் 13 சிபிஐ உயர் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்!

சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்ச வழக்கில் சிக்கி இருப்பதை அடுத்து இன்று ஒரே நாளில் 13 சிபிஐ உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சிபிஐ அமைப்பு மீதே சிபிஐ இயக்குனர் வழக்கு... அதிர்ச்சியில் மத்திய அரசு-வீடியோ

    டெல்லி: சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்ச வழக்கில் சிக்கி இருப்பதை அடுத்து இன்று ஒரே நாளில் 13 சிபிஐ உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ அமைப்பு வழக்கு பதிவு செய்து இருக்கிறது. இறைச்சி ஏற்றுமதி செய்து வந்த தொழிலதிபர் மொயின் குரேஷியின் வழக்கில் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    CBI vs CBI row: CBI transfers 13 officials from the headquarters

    இன்று காலை திடீர் திருப்பமாக சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா இருவரும் இதனால் விடுப்பில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாகேஸ்வர் ராவ் அதுவரை சிபிஐ இயக்குனராக செயல்படுவார்.

    இதை தொடர்ந்து ஒரே நாளில் தற்போது 13 சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். பணியிட மாற்றம் செய்யப்பட்ட அனைத்து அதிகாரிகளும் சிபிஐ அமைப்பில் உள்ள மிக உயர் அதிகாரிகள் ஆவர்.

    இவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவிற்கும், சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவிற்கும் ஆதரவாக செயல்பட்டவர்கள் ஆவர். இதன் காரணமாக இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இவர்கள் அனைவரும் இந்த வழக்கில் விசாரணை முடியும் வரை சிபிஐ தலைமையகத்திற்கு வர கூடாது என்று கூறப்பட்டு இருக்கிறது. சிபிஐ அதிகாரிகள் ஏகே பாஸ், அஜய் பாசி, எஸ்எஸ் கும், ஜபால்பூர், மனிஷ் குமார் சின்ஹா, தருண், ஜஸ்பீர் சிங், அனிஷ் பிரசாத், கே ஆர் சவுராஷியா, ராம் கோபால், சதிஷ் தாகர் ஆகிய அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    இவர்கள் தனியாக விசாரிக்கப்படவும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

    English summary
    Dy SP CBI AK Bassi has been transferred and posted as Dy SP CBI, ACB Port Blair and Addnl SP CBI SS Gum transferred and posted as CBI, ACB Jabalpur, they were probing the case against CBI's Rakesh Asthana ANI ✔ @ANI CBI DIG MAnish Kumar Sinha, DIG Taurn Gauba, DIG Jasbir Singh, DIG Anish Prasad, DIG KR Chaurasia, HoB Ram Gopal and SP Satish Dagar have been transferred. They were probing the case against CBI's Rakesh Asthana.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X