2 அறைக்கு சீல்.. பலருக்கு அனுமதி கிடையாது.. சிபிஐ vs சிபிஐ.. பரபரக்கும் உத்தரவுகள்!
சிபிஐ சிறப்பு இயக்குனர் லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கி இருப்பதால் சிபிஐ தலைமையகத்தில் புதிய கெடுபிடிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: சிபிஐ சிறப்பு இயக்குனர் லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கி இருப்பதால் சிபிஐ தலைமையகத்தில் புதிய கெடுபிடிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ அமைப்பு வழக்கு பதிவு செய்து இருக்கிறது. இவர்தான் லஞ்ச புகாரில் சிக்கி உள்ளார்.
இறைச்சி ஏற்றுமதி செய்து வந்த தொழிலதிபர் மொயின் குரேஷியின் வீட்டில் 2014ல் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்த வழக்கை சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா தலைமையில் சிறப்பு விசாரணை குழு விசாரித்தது. இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களை விடுவிக்க சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கட்டாய விடுப்பு
சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா இருவரும் இதனால் விடுப்பில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாகேஸ்வர் ராவ் அதுவரை சிபிஐ இயக்குனராக செயல்படுவார்.

சீல் வைத்தனர்
இந்த நிலையில் சிபிஐ வரலாற்றில் இல்லாத அளவிற்கு முதல்முறையாக சிபிஐ அலுவலகத்தில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட அறைகள் சீல் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த அறைகள், லஞ்ச வழக்கில் சிக்கி இருக்கும் அஸ்தானா மற்றும் அஸ்தானாவிற்கு அணியில் உள்ளவர்கள் பயன்படுத்தி அறைகள் ஆகும். சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவின் அறையும் சீல் செய்யப்பட்டுள்ளது.

அதிரடி மாற்றம்
அதுமட்டுமில்லாமல் இன்று காலையில் இருந்து மொத்தம் 13 சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். முக்கியமாக அஸ்தானாவின் அணியில் வேலை பார்த்த அனைத்து அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் பலர் மீது இன்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அனுமதி இல்லை
அதேபோல் சிபிஐ அலுவலகத்தில் இன்றில் இருந்து சில நாட்களுக்கு புதிய நபர்களுக்கு அனுமதி இல்லை. ஆம் சிபிஐயின் வேலை பார்த்தாலும் சில நபர்களை இந்த விசாரணை முடியும் வரை உள்ளே அனுமதிக்க முடியாது என்று சிபிஐ அமைப்பு கூறியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிபிஐ விவகாரம் இந்தியாவில் புதிய புயலை கிளப்பி உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications