Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026 ஏப்ரலில் தொடக்கம்.. சேகரிக்கப்படும் விவரங்கள் என்னென்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக மக்கள்தொகை பதிவாளர் மிரித்யுஞ்சய் குமார் நாராயண் கூறியுள்ளார். இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்புடன் முதல்கட்ட பணிகள் தொடங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருதடவை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இதற்கு முன்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. இதன்படி, 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு தள்ளிப்போனது.

Census Central Government

இதனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் எப்போது நடைபெறும் என்ற கேள்விகள் பல்வேறு தரப்பினராலும் எழுப்பப்பட்டன. இந்த நிலையில்தான், வரும் 2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி முதலில் வீட்டுப்பட்டியல் தயாரிப்பும், அடுத்ததாக மக்கள் தொகை கணக்கெடுப்பும் ஆகும்.

இதில் வீட்டுப்பட்டியல் மற்றும் வீட்டுவசதி குறித்த தகவல் சேகரிப்பு அடங்கிய முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் ஆண்டு (2026) ஏப்ரல் 1-ம் தேதி தொடங்குவதாக இந்திய மக்கள் தொகை பதிவாளர் ஜெனரல் மிரித்யுஞ்சய் குமார் நாராயண் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்த பணிகள் தொடங்குவதற்கு முன்பு மாநிலங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் ஒத்துழைப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள், மற்றும் மேற்பார்வையாளர்கள் நியமனம் மற்றும் அவர்களுக்கு பணிப்பகிர்வு ஆகியவை அளிக்கப்படும் என்றும் தனது கடித்தில் மிரித்யுஞ்சய் குமார் நாராயண் தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதல் கட்டத்தில் வீட்டு பட்டியல் தயாரிப்பு மற்றும் வீட்டு வசதி குறித்த கணக்கெடுப்பில் குடும்பத்தினரின் வீட்டின் நிலைமை, சொத்து மற்றும் வசதிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும். அதன்பிறகு நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பில், குடும்ப அங்கத்தினர் எண்ணிக்கை, சமூக-பொருளாதார, கலாசார நிலை குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளது.

மக்கள் தொகையின் இரண்டாம் கட்ட பணிகள் வரும் 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி தொடங்கும் எனவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி விவரங்களும் சேகரிக்கப்படும் என மத்திய அரசு கூறியிருந்தது.

இந்தியாவில் நடைபெறவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, மொபைல் செயலிகள் மூலம் டிஜிட்டல் முறையில் நடத்தப்பட உள்ளது. குடிமக்கள் தாங்களாகவே விவரங்களை உள்ளீடு செய்யும் வசதியும் இதில் வழங்கப்படவுள்ளது. குடிமக்களிடம் கேட்கப்பட வேண்டிய சுமார் 36 கேள்விகளை தயார் செய்துள்ளது.

இந்த கணக்கெடுப்பின் மூலம், வீடுகளில் உள்ள தொலைபேசி, இணைய வசதி, வாகனங்கள் (மிதிவண்டி, ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், கார், ஜீப், வேன்) மற்றும் உபகரணங்கள் (ரேடியோ, டிவி, டிரான்சிஸ்டர்) போன்ற உடைமைகள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.

மேலும், குடிமக்கள் சாப்பிடும் தானியத்தின் அளவு, குடிநீர் மற்றும் மின்சாரத்திற்கான ஆதாரங்கள், கழிவறை வசதி மற்றும் அதன் அணுகல், கழிவுநீர் வெளியேற்றம், குளியலறை மற்றும் சமையலறை வசதிகள், சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள், எல்பிஜி/பிஎன்ஜி இணைப்பு போன்ற விவரங்களும் கேட்கப்படும்.

வீட்டின் தரை, சுவர்கள் மற்றும் கூரைக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், வீட்டின் தற்போதைய நிலை, குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை, அறைகளின் எண்ணிக்கை, திருமணமான தம்பதியர் இருக்கிறார்களா, குடும்பத் தலைவர் பெண் அல்லது பட்டியல் சாதி அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவரா போன்ற கூடுதல் விவரங்கள் கேட்கப்பட உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+