சமையல் எண்ணெய் விலை உயர்வு.. வந்தது புது அறிவிப்பு.. வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு
சமையல் எண்ணெய் இருப்பு வைக்க உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
டெல்லி: சமையல் எண்ணெய் விலையை குறைப்பதற்காக, அதை இருப்பு வைப்பதற்கு மத்திய அரசு உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. இது பொதுமக்களுக்கு ஓரளவு நிம்மதியை தரும் அறிவிப்பாக அமைந்து வருகிறது.
ஏற்கனவே தினம் தினம் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது.. தொடர்ந்து ஒரு வாரமாக பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மக்கள் அதிர்ந்து போயுள்ளனர்..
இந்நிலையில், தற்போது சமையல் எண்ணெய் வகைகளின் விலையும் கடுமையாக உயர்ந்து வருவது மக்களை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.

இறக்குமதி
இந்த விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக, இறக்குமதி வரிச்சலுகை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.. இந்தியாவின் சமையல் எண்ணெய் தேவையில் 60 சதவீதம், இறக்குமதி செய்யப்படுகிறது... சர்வதேச காரணங்களால் சமையல் எண்ணெய் விலை உயர்ந்தபடியே இருக்கிறது... அதாவது 46 சதவீதம்வரை உயர்ந்து விட்டது...

அமைச்சகம்
அதனால், விலையை கட்டுப்படுத்த மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது... அதன்படி, சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துகள் ஆகியவற்றை வியாபாரிகள் இருப்பு வைப்பதற்கு உச்சவரம்பை நிர்ணயித்துள்ளது. இந்த உச்சவரம்பானது, அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை அமலில் இருக்கும். இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.. அந்த அறிக்கையில் உள்ளதாவது:

இருப்பு
"இருப்பு மற்றும் பயன்பாட்டை அடிப்படையாக வைத்து, எவ்வளவு இருப்பு வைப்பது என்பதை மாநில அரசே முடிவு செய்யலாம்.. இருந்தாலும், சிலவகையான ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்களுக்கு இந்த உச்சவரம்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது... எந்த வியாபாரியாவது, உச்சவரம்புக்கு மேல் இருப்பு வைத்திருந்தால், அதிகமாக உள்ள சமையல் எண்ணெய் விவரத்தை மத்திய உணவு அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிப்பதுடன், உரிய காலத்துக்குள் உச்சவரம்புக்குள் கொண்டுவர வேண்டும்.

கட்டுப்பாடு
மேலும், கடுகு எண்ணெய் மீதான யூக வணிகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது... மத்திய அரசின் இந்த முடிவுகளால், உள்நாட்டு சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறையும், அதுமட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு நிம்மதி கிடைக்கும் என்று மத்திய உணவு அமைச்சகம் கூறியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications