சாதிவாரி கணக்கெடுப்புக்கு கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு: இன்று காங்கிரஸ் முக்கிய ஆலோசனை
டெல்லி: நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளும் வகையில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் சம உரிமை, பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் திட்டங்களைக் கொண்டு வந்து, சட்டங்கள் இயற்ற சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியமாகும். இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினரும் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியலில் உள்ளது.

நாட்டில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2010-2011 ஆம் ஆண்டில் இறுதியாக இந்த கணக்கெடுப்பு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, அடுத்த கணக்கெடுப்பு 2020-2021 இல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா தொற்று காரணமாக அந்த சமயத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
இந்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக மத்திய அரசு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ், இந்தியா கூட்டணி கட்சிகள் உள்ளிட்டவை தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன. இந்நிலையில், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் மத்திய அரசின் முடிவு குறித்து ஆலோசனை மேற்கொள்ளும் வகையில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.
-
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications