அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்..அகவிலைப்படி எப்போது வருது தெரியுமா?.. வந்தாச்சு "சதுர்த்தி சர்ப்ரைஸ்"
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி விரைவில் 4சதவீதம் உயர்த்தப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியவண்ணம் உள்ள நிலையில், அதுகுறித்து ஒரு மகிழ்ச்சி தகவல் கசிந்துள்ளது.
நாட்டில் உள்ள 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் ஆண்டுக்கு 2 முறை அதாவது ஜனவரி முதல் ஜுன் மற்றும் ஜூலை முதல் டிசம்பர் மாதங்களுக்கு உயர்த்தி அளிக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு: அந்தவகையில், இந்த முறையும், மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ எனப்படும் அகவிலைப்படி நிலுவைத்தொகையை அனுப்புவதுடன், இந்த மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயரும் வாய்ப்புகள் உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

கடந்த ஜூலை 2023ல் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, ஜூலை 2023க்கான அகில இந்திய CPI-IW 3.3 புள்ளிகள் உயர்ந்து, 139.7 ஆக காணப்பட்டது.. இந்த ஒரு மாத சதவீத மாற்றத்தில், குறியீட்டு எண் முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 2.42 சதவீதம் அதிகரித்துள்ளதாம். எனவே, ஜூலை மாதத்தில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், அரசாங்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, மத்திய பணியாளர் நலத்துறை அகவிலைப்படியை எவ்வளவு உயர்த்த வேண்டும் என்ற அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியும் வைத்திருக்கிறது.. இதன் அடிப்படையிலேயே அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்புள்ளது.
சர்ப்ரைஸ்: எப்படியும், இந்த முறை, 3 முதல் 4 சதவீதம் வரை அகவிலைப்படி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த யூகம், உண்மையானால், அகவிலைப்படி தற்போதுள்ள 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதத்தை எட்டும் என்றும் தெரிகிறது. குறிப்பாக, அகவிலைப்படி 46 சதவீதம் என கணக்கிட்டால், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ 18,000 இருக்கக்கூடும்.
கடந்த 2 மாத காலமாகவே, அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. தற்போது, விநாயகர் சதுர்த்தி பண்டிகை நெருங்கி கொண்டிருக்கிறது.. தீபாவளியும் வரப்போகிறது என்பதால், இந்த மாத இறுதிக்குள்ளேயே அதாவது செப்டம்பர் மாத இறுதிக்குள் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரப்போகிறதாம்.
எகிறும் சம்பளம்: அறிவிப்பு வெளியானால், அது சம்பளத்தில் ஜூலை 1,2023 இருந்து அமலுக்கு வரும் என்றும், அகவிலைப்படி 3% உயர்வுடன் வரும் என்றும், இதனால், ஊழியர்களின் சம்பளம் கணிசமாக எகிறும் என்றும் தகவல்கள் கூறுகின்றன..
கடந்த மாதம், அகில இந்திய ரயில்வே ஃபெடரேஷன் பொதுச்செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா பேசும்போது, "அகவிலைப்படியில் 4 சதவீத புள்ளிகளை உயர்த்தும், ஆனால், அகவிலைப்படி உயர்வு 3 சதவீத புள்ளிகளுக்கு சற்று அதிகமாக இருக்கும்... DA 3 சதவீத புள்ளிகள் அதிகரித்து 45 சதவீதமாக இருக்கும்" என்று கூறியிருந்தார்.
டபுள் மகிழ்ச்சி: அந்தவகையில் பார்த்தால், அகவிலைப்படி சதவீதம் = (அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் சராசரி (அடிப்படை ஆண்டு 2001=100) கடந்த 12 மாதங்களில் -115.76) அல்லது 115.76)x100 ஆக இருக்கிறது.. மத்திய பொதுத்துறை ஊழியர்களை பொறுத்தவரை, அகவிலைப்படி சதவீதம் = (அனைத்திந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் சராசரி (அடிப்படை ஆண்டு 2001=100) கடந்த 3 மாதங்களில் -126.33)/126.33)x100 ஆக உள்ளது.
1 கோடி பேர்: தற்போதுவரை, பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் என, 1 கோடிக்கும் அதிகமானோர் 42 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள். விரைவில் அகவிலைப்படியை உயர்த்தி, அறிவிப்பு வெளியானால், ஒரு கோடிக்கும் அதிகமான பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலன் அடையக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications