Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு ஊழியர்களுக்கு அடிக்க போகுது ஜாக்பாட்! விரைவில் வரப்போகும் குட் நியூஸ்.. டிஏ எவ்வளவு உயரும்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை டிஏ எனப்படும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். நடப்பு ஆண்டில் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை டிஏ எனப்படும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது. அதாவது, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் என இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டிற்கான அகவிலைப்படி உயர்வு கடந்த மார்ச் மாதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. ஜனவரி 1 ஆம் தேதியிட்டு இந்த அகவில்லைப்படி உயர்த்தி வழங்கப்பட்டது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.

 Central government is likely to increase the DA for its over one crore employees to 45 percentage

இந்த நிலையில், ஜூலை மாதம் முடிந்துள்ள நிலையில், விரைவில் அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த அகவிலைப்படி உயர்வு, விலைவாசி ஏற்றத்தை குறிக்கும் பணவீக்க விகிதத்துக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், தொழிலாளர் நல அமைச்சகம் அளிக்கும் விவரங்களின் அடிப்படையில் இந்த அகவிலைப்படி உயர்வு எத்தனை சதவீதம் அளிக்கப்படும் என்று மத்திய அரசு முடிவு செய்து அறிவிக்கும்.

அதன்படி, அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தப்பட்டு 45 சதவிகிதமாக அளிக்கப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. ஜூலை 1 ஆம் தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும். அகவிலைப்படி உயர்வு மூலம் ஏறத்தாழ 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 69.76 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே இருக்கும்.

முன்னதாக, அகில இந்திய ரயில்வே பெடரேஷன் பொதுச் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா கூறுகையில், ஜூன் மாதத்திற்கான ஏஐசிபிஐ தரவுகளின்படி அகவிலைப்படியில் 4% உயர்த்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. நிதியமைச்சகத்தின் செலவினத் துறை அதன் வருவாய் அகவிலைப்படியை உயர்த்துவதற்கான முன்மொழிவை உருவாக்கி, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும்" என்றார்.

அகவிலைப்படி உயர்வு ஜுலை 1 ஆம் தேதியிட்டு அமலுக்கு கொண்டு வரப்பட உள்ளது. அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் என சுமார் ஒரு கோடி பயன்பெறுவார்கள். 45 சதவீதம் என்பது அடிப்படை ஊதியத்தில் கணக்கிட்டு கொடுக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+